Home /News /entertainment /

பாக்கியலட்சுமி சீரியலில் புது ட்விஸ்ட்... வெளியான புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் புது ட்விஸ்ட்... வெளியான புகைப்படத்தால் குழம்பிய ரசிகர்கள்!

baakiyalakshmi

baakiyalakshmi

Baakiyalakshmi Serial | உனக்கு நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை வசனங்களை பேசி ராதிகாவை தன் வசப்படுத்த நினைக்கிறார் கோபி. ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நடத்தி விட வேண்டுமென்று ராதிகாவின் அம்மா முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
பொதுவாக சின்னத்திரை சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள் மட்டும் விரும்பி பார்க்கக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தது. இந்த போக்கு நாளடைவில் மாறியது. இளைய வட்டாரங்களும் பார்க்கும் விதத்தில் சீரியலின் பழைய பாணியை மாற்றி காதல், நகைச்சுவை போன்ற விஷயங்களுக்கு பல சீரியல்கள் முக்கியத்துவம் கொடுத்து வந்தன. அதேபோல, கடந்த 2 வருடங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் சீரியல்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தொலைக்காட்சி சீரியல்களும் ரசிகர்களை கவரும் விதத்தில் பல விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக ஒருவருக்கு இரு மனைவிகள், ஒருவருக்கு இரு காதல் ட்ராக் ஓடுவது, கள்ளக்காதல் போன்ற கதைக்களத்தை மையமாக கொண்டு பல சீரியலைகள் ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறது என்று சொல்லலாம். அப்படி ஒரு கதைக்களத்தை கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. விஜய் டிவி-யில் ஒளிபரப்படும் ஹிட் சீரியல்களில் இதுவும் ஒன்று. திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்காக மட்டும் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் இல்லத்தரசியின் கதையை அடிப்படையாக கொண்டு இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதிலும், மனைவியை கொஞ்சம் கூட மதிக்காத கணவர் கோபி, குடும்பத்திற்கு தெரியாமல் தனது பழைய காதலியுடன் மிகவும் நெருங்கி பழகி வருவது போன்ற கதைக்களத்தால் சீரியலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில், சமீப காலமாக பாக்கியாவின் கணவர் கோபி மற்றும் அவரது தோழி ராதிகாவின் உறவினை மையமாக கொண்டு காட்சிகளை வடிவமைத்து வருகிறது சீரியல் குழு.

Also Read : யாஷிகாவுடன் பிரேக்கப் ஆனது உண்மையா? பிக் பாஸ் நிரூப் சொன்ன அதிர்ச்சி கலந்த உண்மை!

கோபிக்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு திருமணம் முடிந்தது. அவருடைய பெண் தோழியான ராதிகா ஏற்கனவே திருமணம் முடிந்து அவரும் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கிறார். இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தில் யாருமே தன்னை மதிக்கவில்லை என்றெல்லாம் பொய் வசனங்களை பேசி ராதிகாவின் மனதில் கோபி இடம் பிடிக்கிறார். உனக்கு நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை வசனங்களை பேசி ராதிகாவை தன் வசப்படுத்த நினைக்கிறார் கோபி. ராதிகா மற்றும் கோபியின் திருமணத்தை நடத்தி விட வேண்டுமென்று ராதிகாவின் அம்மா முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். கோபியின் பித்தலாட்டத்தை பாக்கியலட்சுமி எப்படி கண்டுபிடிப்பார் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.



இந்த நிலையில், கோபி மற்றும் ராதிகா தற்போது திருமணம் செய்துகொண்டது போல போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சீரியல் ரசிகர்களின் கவனத்தை பெறும் நோக்கில் நெட்டிசன்களால் இணையத்தில் இந்த போட்டோ பகிரப்பட்டு வருகிறது. இதைப் பார்த்ததும் ஒரு சிலர் இந்த மாதிரி கதை தேவையா?? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் இது என்ன புது ட்விஸ்ட். ஏற்கனவே கோபியின் நடவடிக்கையில் சந்தேகம் கொள்ளும் பாக்கியா, தனது கணவனின் திருட்டு தனத்தை கண்டுபிடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்டு வந்தநிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: TV Serial, Vijay tv

அடுத்த செய்தி