ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இது நியாயமா பிக் பாஸ்? தனலட்சுமி எலிமினேஷன் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம்

இது நியாயமா பிக் பாஸ்? தனலட்சுமி எலிமினேஷன் குறித்து நெட்டிசன்கள் விமர்சனம்

பிக் பாஸ் தனலட்சுமி

பிக் பாஸ் தனலட்சுமி

எலிமினேஷனுக்கு முன்பே தனலட்சுமி வெளியேற்றப்படும் விஷயம் இணையத்தில் கசிந்ததால், சேவ் தனா என்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகின.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டது கொஞ்சம் கூட நியாயமில்லை என இணையத்தில் தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் விஜய் டிவி-யில் தொடங்கியது. கடந்த ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்நிகழ்ச்சி தற்போது 6-வது முறை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவி-யை தவிர, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியின் தொடக்க நாளில் மொத்தம் 20 போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் கமல் ஹாசன். பின்னர் நேரடியாக வீட்டுக்குள் வந்தார் மைனா. மொத்தம் 21 போட்டியாளர்களில் தற்போது 9 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் உள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடும் மைனா, ரச்சிதா, கதிர் ஆகியோர் வீட்டுக்குள் இருக்கும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கொடுத்த தனலட்சுமி ஏன் வெளியேற்றப்பட்டார் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

வெளியானது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி!

எலிமினேஷனுக்கு முன்பே தனலட்சுமி வெளியேற்றப்படும் விஷயம் இணையத்தில் கசிந்ததால், சேவ் தனா என்ற ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகின. ஆனால் அவர் சேவ் செய்யப்படவில்லை. இதனால் விஜய் டிவி தனது சேனல் ஆட்களை காப்பாற்றி மற்றவர்களை, பார்வையாளர்களின் ஓட்டுக்கு நேரெதிராக வெளியேற்றுவதாகவும், அதை கமல் ஹாசன் கூட கேட்க மறுக்கிறார் என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bigg Boss Tamil