ரஜினியின் 169 வது படத்தை இயக்குகிறவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியை இயக்கலாம் என்கின்றன தகவல்கள்.
ரஜினி படத்தை யார் இயக்குகிறார்கள், யார் தயாரிக்கிறார்கள் என்பது எப்போதுமே பிரேக்கிங் செய்தியாகவே இருந்து வந்திருக்கிறது. அவரது முந்தைய படம் அண்ணாத்தயை சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்தது. சென்ற வருடம் தீபாவளிக்கு அண்ணாத்த வெளியானது.
இதையடுத்து அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. பிறகு இளையராஜா தயாரித்து இசையமைக்கும் படத்தில் நடிக்கிறார், பால்கி இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார் என்றனர். இந்நிலையில் கோலமாவு கோகிலா, டாக்டர் வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ்... கதையைக் கேட்டு கண்ணீர் விட்ட கஸ்தூரி ராஜா?
நெல்சன் தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை முடித்துள்ளார். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் 14-ஆம் தேதி
பீஸ்ட் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து அவர் ரஜினியை இயக்கலாம் என்கின்றன கோடம்பாக்கத்தில் இருந்து வரும் செய்திகள். இவர்கள் இணையும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட யாரும் இச்செய்தியை இதுவரை உறுதி செய்யவில்லை.
சன் டிவி சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் ஃபலோ பண்ணும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!
பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி போன்ற ஒரு ஹிட் சமீபத்திய ரஜினி படங்களுக்கு கிடைக்கவில்லை. அப்படியொரு வெற்றியுடன் திரையுலகிலிருந்து விடைபெற நினைக்கிறார் ரஜினி. அடுத்தப் படத்திலாவது அவரது விருப்பம் நிறைவேறுகிறதா பார்ப்போம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.