தாயாக உணர்கிறேன் - பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இனியா நெகிழ்ச்சி

நடிகை நேகா மேனன்

நடிகை நேகா மேனன் பாக்கியலட்சுமி தொடரில் இனியா கோபிநாத் என்ற கதாப்பாத்திரத்திலும், சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்

  • Share this:
சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நேகா மேனனுக்கு தங்கை கிடைத்துள்ளார். இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ள அவர், தங்கையின் செல்லப் பெயரையும் பதிவிட்டு பூரிப்படைந்துள்ளார். 19 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு தங்கை கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சகோதரி, தாய் என்ற இரண்டு உணர்வுகளும் ஒரே நேரத்தில் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

புதிதாக வீட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தங்கைக்கு சாஹிதி எனப் பெயரிட்டிருப்பதாக நடிகை நேகா மேனன் தெரிவித்துள்ளார். ஆனால் அவளை ’சிக்கு’ ’பூந்தி’ என பட்டப் பெயரிட்டு அழைப்பதாக தெரிவித்துள்ள அவர், அவளுடைய வருகை மூலம் தன்னையும், தன் பெற்றோரையும் கடவுள் ஆசிர்வதித்திருப்பதாக கூறியுள்ளார்.

Also Read : மௌன ராகம் 2 சீரியல் நிறுத்தமா? அப்டேட் கொடுத்த சீரியல் குழு

தனக்கு 19 ஆவது பிறந்த நாள் கொண்டாடிய அடுத்த மாதத்திலேயே, தங்கள் வீட்டுக்கு சகோதரி வந்திருப்பதாகவும், எனக்குள் இப்போது ஒரு மாயாஜால உணர்வு ஏற்பட்டிருப்பதாகவும் நடிகை நேகா மேனன் தெரிவித்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேகா மேனனுக்கும், அவருடைய தங்கைக்கும் பலரும் வாழ்த்துகளை கூறியுள்ளனர். 
View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)


நேகா மேனன் எழுதியுள்ள பதிவில், "எனக்கு தங்கை கிடைத்திருக்கிறாள், என் குழந்தை சாஹிதியை மகிழ்ச்சியாக வரவேற்கிறேன். அப்பா, அம்மா, என்னை கடவுள் ஆசிர்வதித்திருக்கிறார். அண்மையில் நான் 19வது பிறந்தநாளை கொண்டாடினேன். என் மீது அன்பு வைத்து பலரும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டதற்கு நன்றி. ’சிக்கு’ எங்கள் வீட்டில் ஒருவராகிவிட்டார். நான் மிகவும் அதிஷ்டக்காரி இல்லையா? எல்லா சகோதரிகளுக்கும் அம்மா, சகோதரி என்ற உணர்வு ஒரே நேரத்தில் கிடைக்காது. ஆனால் எனக்கு கிடைத்திருக்கிறது. இப்போது எனக்குள் ஏற்பட்டிருக்கும் உணர்வு மாயாஜாலத்தைப் போல் இருக்கிறது. வைரம் போல் என் தங்கை இருப்பாள். நாங்கள் எல்லோரும் இணைந்து அவளை வளர்ப்போம். பெண்கள் எப்போதும் ஸ்ட்ராங்கானவர்கள். அம்மா என்றாலே அன்பு" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read : விஜே சித்ரா மரணம் குறித்து வெளியிடப்படும் மோசமான தகவல்கள் - ரசிகர்கள் எச்சரிக்கை

நடிகை நேகா மேனன் பாக்கியலட்சுமி தொடரில் இனியா கோபிநாத் என்ற கதாப்பாத்திரத்திலும், சித்தி 2 சீரியலில் செவ்வந்தி கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார். தமிழ் செல்வி தொடரில் கயலாகவும், பிள்ளை நிலா தொடரில் நிலாவாகவும் முத்திரை பதித்திருந்தார். நிறம் மறந்த பூக்கள், பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் உள்ளிட்ட சில தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். ஏற்கும் கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நேகா மேனனுக்கு அடுத்தடுத்த இயல்பான வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தொடரிலும் கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப பொருந்தி நடிப்பதாக அவரை, அவருடன் நடிக்கும் பல நடிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், முக்கிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருவதால் சின்னத்திரையில் கவனிக்கத் தக்க இடத்தையும் நேகா மேனன் பெற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: