நீயா நானா நிகழ்ச்சி மூலம் அனைத்து இல்லங்களுக்கும் அறிமுகமானவர் தொகுப்பாளர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அணியும் ‘கோட்’ இவருக்கு புதிய அடைமொழியை வாங்கி தந்தது. அதன் பின்பு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் ‘கோட்டு கோபிநாத்’ என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். மேடை பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட கோபிநாத் விஜய் டிவியின் மூத்த தொகுப்பாளராக பார்க்கப்படுகிறார். விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் கோபியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
கணவர் குறித்து முதன் முதலாக பேசிய விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா! விவாகரத்து வதந்தி உண்மையா?
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை கோபி பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரின் உடல் மொழி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் ஒன்று. காலத்திற்கு ஏற்றார் போல நிகழ்ச்சியின் தலைப்புகளை, விவாதங்களை மாற்றியமைத்து
சமூக அக்கறையுடன்
நீயா நானா நிகழ்ச்சியை வழி நடத்தி செல்வதில் கோபியை யாராலும் அடித்துக் கொள்ள முடியாது.
இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் முதல் எபிசோடில் இருந்து இன்று வரை தொகுப்பாளராக இருக்கிறார் என்பதே இதன் மிகப்பெரிய சிறப்பு.
கோபி தன்னுடைய குடும்பத்தை பற்றி பொதுவெளியில் அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளமாட்டார். அவரின் மனைவி துர்கா, மகள் வெண்பா பற்றி சமீபத்தில் தான் மனம் திறந்து ஒரு பேட்டியில் பதிவு செய்து இருந்தார். அதே போல் இவரின் பயணம் விஜய் டிவியில் மட்டுமே தொடர்கிறது. இந்நிலையில் தற்போது இணையத்தில் கோபிநாத் குறித்த தகவல் ஒன்று காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது அவரின் முழு சொத்து மதிப்பு 1 முதல் 5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 7 கோடி முதல் 39 கோடி வரை) என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுக் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை இருப்பினும் கோபிநாத்தின் சொத்து மதிப்பு பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
பெண் குழந்தை பிறந்தது.. ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ் சொன்ன ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தாமரை!
கடந்த சில நாட்களாக விஜய் டிவி பிரபலங்கள், ஆங்கர்கள், தமிழ் சினிமா நடிகர் நடிகைகளின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன், ராதிகா, மீனா, விஜய் டிவி டிடி, மாகாபா வரிசையில் தற்போது கோபிநாத் சொத்து விவரம் குறித்த தகவலும் காட்டுத் தீ இணையத்தில் பரவி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.