Home /News /entertainment /

கணவரின் மருத்துவ செலவு, மகளின் படிப்பிற்காக உழைக்கிறேன் - நீயா நானா வைரல் பெண்

கணவரின் மருத்துவ செலவு, மகளின் படிப்பிற்காக உழைக்கிறேன் - நீயா நானா வைரல் பெண்

நீயா நானா வைரல் பெண்

நீயா நானா வைரல் பெண்

இவருக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் மருத்துவ செலவுக்காகவே நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். தினமும் வேலைக்கு சென்று வந்து, வீட்டு வேலைகளை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கடந்த வாரம் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் சிறந்த தந்தை என தொகுப்பாளர் கோபிநாத்தால் அங்கீகரிக்கப்பட்ட சீனிராஜா-வின் குடும்பத்தினருடன் நியூஸ்-18 நடத்திய நேர்க்காணலை இங்கே பதிவிடுகிறோம்.

    உங்கள் குழந்தை மார்க் ஷீட்டை பார்க்கும் போது எப்படி உணர்வீர்கள்?

    நான் 9-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். 10-க்குள் தான் எனது மதிப்பெண் இருக்கும். ஆனால் என் மகள் 80, 90 என வாங்கும் மார்க்குகளைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.

    உடல்நிலை சரியில்லை என்றீர்களே?

    எனக்கு கிட்னியில் பிரச்னை. அதனால் முடிந்த சின்ன சின்ன வேலைகளை தான் செய்ய முடிகிறது. என மகள் என்னை தாயாக இருந்து பார்த்துக் கொள்கிறாள். நேரத்துக்கு மாத்திரை கொடுப்பது, தண்ணி கேட்டா கூட அளவா தான் கொடுப்பா.

    மகளிடம் அப்பா தோத்துப் போகலைன்னு சொன்னீங்களே? என்று கேட்டதற்கு...

    அதைத்தான் நிகழ்ச்சியிலும் சொன்னேன். எங்கப்பா எனக்காகத்தான் கஷ்டப்படுறாரு. என் மார்க்கை பாத்து ரொம்ப சந்தோஷப்படுவாரு. எனக்காகத்தான் எல்லாம் பண்றாரு. நான் அப்பா பிள்ளை, அது எங்கம்மாவுக்கே தெரியும். அப்பா மருத்துவமனைக்கு போய்ட்டு வந்து ரொம்ப டயர்டா வருவாரு, வந்ததும் கை, கால் அமுக்கி விடுவேன். சொல்லப்போனா அவரை தினமும் தூங்க வைக்கிறதே நான் தான்.

    வைரலாகும் வாரிசு விஜய் - ராஷ்மிகா மந்தனாவின் செல்ஃபி!



    தன் கணவரை பொதுவெளியில் அசிங்கப்படுத்தியதாக இணையத்தில் பலரின் சாபத்திற்கு ஆளாகியிருக்கும் அந்த  மனைவி பேசுகையில்,

    ”நான் பாப்பாவோட மார்க் ஷீட் பாத்துட்டு எதுல கம்மியா இருக்குன்னு பாத்துட்டு, அடுத்த டைம் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ண சொல்வேன். இவருக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் மருத்துவ செலவுக்காகவே நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். தினமும் வேலைக்கு சென்று வந்து, வீட்டு வேலைகளை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கும். அடிக்கடி இவர் மருத்துவமனையில் ஒருவாரம் முழுக்க தங்க நேரிட்டு விடும். அந்த சமயத்தில் நான் லீவு போட்டு பார்த்துக் கொள்வேன். வீட்டுக்கு வந்ததும் என் மகள் தான் என் கணவரை குளிக்க வைப்பாள். ஏற்கனவே லீவு போட்டதால், வேலைக்கு போக வேண்டிய சூழலுக்கு நான் தள்ளப்படுவேன்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    குழந்தைக்கு டியூஷன் செலக்ட் பண்ணுவது, அவளை வெளியில் அழைத்துச் செல்வது, துணி வாங்க அழைத்துச் செல்வதெல்லாம் என் கணவர் தான் பார்ப்பார். குடும்பத்தையும், கணவரின் மருத்துவ தேவையையும் பூர்த்தி செய்ய நான் வேலைக்கு சென்று விடுவேன்” என்றார்.

     
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி