Home /News /entertainment /

நீயா நானா கோபிநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பெண்.. 19 வருட சோகம்!

நீயா நானா கோபிநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய பெண்.. 19 வருட சோகம்!

நீயா - நானா கோபிநாத்

நீயா - நானா கோபிநாத்

ஆங்கர் கோபிநாத்தை அண்ணனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு அந்த சடங்கு முறையை செய்கிறார்.

    நீயா நானா கோபிநாத் காலில் விழுந்து வட இந்திய பெண் ஒருவர் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். 19 வருடமாக ரக்‌ஷா பந்தன் கொண்டாட காத்துக் கொண்டிருந்த பெண்ணின் சோகத்தை கோபிநாத் தீர்த்து வைத்துள்ளார். இதுக் குறித்த புரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி 23 சீசன்களை கடந்து 800 எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல சேனல்களில் டிபெட் ஷோ தொடங்கப்பட்டது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது நீயா நானா நிகழ்ச்சி. அதற்கு மிகப் பெரிய காரணம், நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொன்னால் அது மிகையல்ல. மொத்த ஷோவையும் தனது கட்டுக்குள் வைத்து இருப்பார். விவாதங்கள் எல்லாம் முடிந்த பின்பு தனக்கே உரிய பாணியில் ஃபைனல் டச் கொடுத்து விட்டு ஷோவை முடிப்பார்.

    இந்த 800 எபிசோடுகளில் நீயா நானா ஷோ பல  தலைப்புகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம், வெளிமாநில பெண்ணை திருமணம் செய்த கணவர்கள், தங்கள் மனைவிகளுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறர்கள். இதுக் குறித்த புரமோக்கள் தற்போது வெளியாகியுள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற வேற்று மொழி பேசும் மாநிலங்களை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்ட கணவன்மார்கள் பல விஷயங்களை ஷேர் செய்கின்றனர்.



    அப்போது நிகழ்ச்சியில் பேசும் கணவர் ஒருவர், தனது மனைவி 19 வருடமாக ரக்‌ஷா பந்தன் நாளை கொண்டாட அவரின் அண்ணனுக்காக காத்துக் கொண்டிருப்பதாக  கூறுகிறார். ராக்கி கயிறுடன் வந்திருக்கும் அந்த பெண், ஆங்கர் கோபிநாத்தை அண்ணனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு அந்த சடங்கு முறையை செய்கிறார். கோபிக்கு திலகம் வைத்து, ராக்கி கட்டி, ஸ்வீட் கொடுத்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். இதை பார்த்து அவரின் கணவர் கண்கலங்கி நிற்கிறார்.

    இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களையும் கலங்க வைக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியான இந்த தருணத்தை நாளை (17.7.22) ஒளிப்பரப்பாகும் நீயா நானா எபிசோடில் முழுமையாக பார்க்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, Vijay tv

    அடுத்த செய்தி