Home /News /entertainment /

Gopinath: துப்புரவு தொழிலாளியாக மாறிய நீயா நானா கோபிநாத்... பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!

Gopinath: துப்புரவு தொழிலாளியாக மாறிய நீயா நானா கோபிநாத்... பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!

நீயா நானா கோபிநாத்

நீயா நானா கோபிநாத்

துப்புரவு தொழிலாளிகளின் கஷ்டத்தை வெளியுலகிற்கு சொல்லும் வகையில் ஒருநாள் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்திருக்கிறார் கோபிநாத்.

    ஒரு நாள் முதல்வர் போல ஒரு நாள் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியிருக்கிறார் விஜய் டிவி கோபிநாத்.

    தனது சாதுர்யமான பேச்சால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் விஜய் டிவி கோபிநாத். இவரின் பேச்சுக்கும் கருத்துக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்வதோடு, ஆழமாகவும், ஆர்வம் குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர்.

    ரேடியோ ஜாக்கி, தொகுப்பாளர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர் எனப் பல திறமைகளை கொண்டுள்ள கோபிநாத் தற்போது விஜய் டிவி-யில் நீயா நானா விவாத நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் எல்லா செய்தி சேனல்களிலும் விவாத நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ஆனால் அனைத்திற்கும் முன்பே சாமனியனுக்கும் விவாத நிகழ்ச்சியை கொண்டு சேர்த்ததில், நீயா நானாவுக்கு பெரும் பங்குண்டு. இந்நிகழ்ச்சி வெற்றியடைய முக்கியக் காரணம் அதன் தொகுப்பாளர் கோபிநாத் தான். சின்னத்திரை பிரபலங்கள் பெரும்பாலும் தங்களுக்கென யூ-ட்யூப் சேனல் வைத்திருப்பதைப் போல கோபிநாத்தும் தனது பெயரில் யூ-ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

    பிக் பாஸ் தாமரைச் செல்வி வீட்டிற்கு சென்ற பிரபலம் - லைக்ஸை அள்ளும் புகைப்படம்!

    இந்நிலையில் துப்புரவு தொழிலாளிகளின் கஷ்டத்தை வெளியுலகிற்கு சொல்லும் வகையில் ஒருநாள் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்திருக்கிறார் கோபிநாத். சமீபத்தில் துப்புரவு தொழிலில் ஈடுபடுபவர்களை சந்தித்து அவர்களின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துக் கொண்டுள்ளார். ஒருநாள் அவர்களுடன் சேர்ந்து தானும் ஓர் துப்புரவுத் தொழிலாளியாக மாறியுள்ளார். துப்புரவு தொழிலாளியின் உழைப்பு இந்த சமூகத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை அந்த வீடியோவில் காட்டியுள்ளார்.



    மீண்டும் ஒளிபரப்பை தொடங்கிய விஜய் டிவி-யின் வைதேகி காத்திருந்தாள் தொடர்!

    காலை 7 மணிக்கு ஆரம்பிக்கும் அவர்களின் அன்றாட வேலை மதியம் ஒரு மணிக்கு முடிகிறது. அதுவரை துப்புரவு வாகனத்தை ஓட்டுவது, மக்களிடமிருந்து குப்பையை சேகரிப்பது, அவர்களுடன் உரையாடுவது என ஒரு சக தொழிலாளியாக பயணம் செய்துள்ளார் நீயா நானா கோபிநாத்.



    கோபிநாத் தனது யூ-ட்யூப் சேனலில் இரண்டு பாகமாக பதிவிட்டிருக்கும் அந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த முயற்சிக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி