• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாசக்கார பிரதர்ஸ் கோபிநாத் - பிரபு! ஒரே சேனலில் இருவரின் பயணமும் வெற்றி தான்..

பாசக்கார பிரதர்ஸ் கோபிநாத் - பிரபு! ஒரே சேனலில் இருவரின் பயணமும் வெற்றி தான்..

அண்ணனுடன் கோபிநாத்

அண்ணனுடன் கோபிநாத்

நன்கு படித்து பெரிய துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் அவரின் கனவாக இருந்துள்ளது

  • Share this:
    விஜய் டிவி நீயா  நானா புகழ் கோபிநாத்தின் அண்ணன் பிரபு தங்களது குடும்பத்தை பற்றியும் தம்பி குறித்தும் நிறைய விஷயங்களை யூடியூப் பேட்டின் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

    மொத்த அரங்கத்தையும் சாதுர்யமான பேச்சினால் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத்திறனுக்கு சொந்தக்காரர் கோபிநாத்.இவரின் பேச்சுக்கும் கருத்துக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம். உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர். ஆழமாகவும், ஆர்வம் குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர்.

    also read சென்னையில் இருந்ததால் தான் எனக்கு இது நடந்தது.... கண்ணான கண்ணே ப்ரீத்தி ஷேரிங்ஸ்!

    இன்றளவிலும் நீயா நானா நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம் கோபி என்றே கூறலாம். தொகுப்பாளராகவும், பத்திரிக்கையாளர், ரிப்போர்டர், நியூஸ் வாசிப்பவர், எழுத்தாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ள கோபியை மிகச் சிறந்த முறையில் வழிநடத்தியவர் அவரின் அண்ணன் பிரபு தான். கோபி நன்கு படித்து பெரிய துறையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தான் அவரின் கனவாக இருந்துள்ளது.



    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிதான் கோபியின் சொந்த ஊர். பூர்விகம் தஞ்சாவூர் ஜில்லா சித்துக்காடு. படித்தது எல்லாமே அறந்தாங்கி, திருச்சியில்தான்.ரேடியோ ஜாக்கியாகவும் வேலை பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் தனக்கான இடத்தை தேர்வு செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அப்போதெல்லாம் அவரை சிறப்பான பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் பிரபு.

    இவரைக்கூட நீங்கள் விஜய் டிவியில் பார்த்திருப்பீர்கள். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகாவின் அப்பாவாக நடித்து வருகிறார். ரியல் லைஃப் சூரிய வம்சம் குடும்பத்தை போல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பாசக்கார பிரதர்ஸ் இவர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: