Home /News /entertainment /

குட் நியூஸ் சொன்ன ‘நீதானே என் பொன்வசந்தம்’ அனு.. வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்!

குட் நியூஸ் சொன்ன ‘நீதானே என் பொன்வசந்தம்’ அனு.. வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்!

நீதானே என் பொன்வசந்தம் அனு

நீதானே என் பொன்வசந்தம் அனு

தர்ஷனா டாக்டரும் கூட. ஒரு பக்கம் கெரியர், ஒரு பக்கம் ஃபேஷன் என பேலன்ஸ் செய்து வருகிறார்.

    ஜீ தமிழில் ஒளிப்பரப்பான நீதானே என் பொன்வசந்தம் சீரியலில் அனு என்ற ரோலில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் சீரியல் பிரபலம் தர்ஷனா. இளைஞர்களுக்கு பிடித்தமான சின்னத்திரை நாயகி இடத்தை முதல் சீரியலிலே பெற்று விட்டார். சின்னத்திரை நடிகர், நடிகைகள் பெரும்பாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பது இன்று சகஜமான ஒன்றாகி விட்டது. இதன்மூலம் அவர்கள் ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாகிவிடுகின்றனர். அந்த வகையில் தர்ஷனா இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ். இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர். நீதானே என் பொன்வசந்தம் சீரியல் முடிந்த பின்பு இவரின் அடுத்த சீரியல் எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    டிடி அக்கா பிரியதர்ஷினிக்கு ஷூட்டிங் போது நடந்த சோகம்!

    அவர்களுக்கு தான் இந்த குட் நியூஸ். கூடிய விரைவில் தர்ஷனாவை கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் பார்க்க போகிறீர்கள். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பே இந்த சீரியல் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தர்ஷனா டாக்டரும் கூட. ஒரு பக்கம் கெரியர், ஒரு பக்கம் ஃபேஷன் என பேலன்ஸ் செய்து வருகிறார். கன்னடத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஜோதே ஜோதேயலி’ என்ற தொடரின் ரீமேக் தான் ’நீதானே என் பொன் பொன்வசந்தம்’ சீரியல். இப்போது தர்ஷனா அடுத்து நடிக்க போகும் சீரியல், கண்ட நாள் முதல்.

    பாக்கியலட்சுமி கோபி இப்படி கூட நடிப்பாரா? ஷாக்கான ரசிகர்கள்!



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்த சீரியலின் ஹீரோ இதயத்தை திருடாதே நவீன் குமார். நவீனும் தர்ஷனாவும் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ள ’கண்ட நாள் முதல்’ சீரியல் மூலம் ஜோடி சேரவுள்ளனர். இதயத்தை திருடாதே2 சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதற்கு அடுத்தப்படியாக இந்த சீரியல் ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. நவீன் - தர்ஷனா ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் கெமிஸ்ட்ரியை பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial, Zee Tamil Tv

    அடுத்த செய்தி