Home /News /entertainment /

சீரியல் நடிகை நீலிமாவிடம் ஏடாகூடமான கேள்வி... அவரின் பதிலுக்கு குவியும் ஆதரவு!

சீரியல் நடிகை நீலிமாவிடம் ஏடாகூடமான கேள்வி... அவரின் பதிலுக்கு குவியும் ஆதரவு!

நீலிமா ராணி

நீலிமா ராணி

நீலிமா ராணியிடம் நெட்டிசன் ஒருவர் அவரின் உள்ளாடை சைஸ் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    சீரியல் நடிகை நீலிமா ராணியிடம் அநாகரிகமான கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு மிகவும் காட்டமான பதிலை கூறியுள்ளார் நீலிமா. அவரின் பதிலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

    சோஷியல் மீடியாக்களில் பெண்களிடம் அந்தரங்கமான, முகம் சுழிக்கும் வகையான கேள்விகளை கேட்டு அவர்களை சங்கடமாக உணர வைப்பது சமீபகாலமாக அதிகம் தொடர்ந்து வருகிறது. முகம் தெரியாது, அவர்களை தொடர்பு கொள்ள முடியாது என்ற தைரியத்தில் இதுப்போன்ற கேள்விகளை கேட்டு விட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். அதிலும் சினிமா பிரபலங்கள் பொதுவாக இதுப்போன்ற தாக்குதல்களை அதிகம் எதிர் கொள்கின்றனர். அந்த வகையில் சின்னத்திரை நடிகையான நீலிமா ராணியிடமும் இதே போல் நெட்டிசன் ஒருவர் ஏடாகூடமான கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு நீலிமாவும் தகுந்த பதிலடி கொடுத்து இருக்கிறார்.

    சின்னத்திரை நடிகை ரேஷ்மா பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?

    2000-களில் சின்னத்திரை ராணியாக வலம் வந்த நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒளி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து ரசிகர் பட்டாளத்தை தன் வசமாகியவர். கடைசியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பான அரண்மனை கிளி சீரியலில் வில்லி ரோலில் நடித்து இருந்தார். அதன் பின்பு நடிப்பில் இருந்து ஒதுங்கியவர் தயாரிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்.

    பிக் பாஸ் ஓவியாவின் திடீர் முடிவு.. ரசிகர்கள் செம்ம ஹேப்பி!

    ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் சில சீரியல்களை தயாரித்து வருகிறார். இவரின் கணவரும் சினிமா துறையை சார்ந்தவர் தான். தற்போது நீலிமா தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அதே போல் இருவருக்கு சமீபத்தில் தான் 2வது  குழந்தை பிறந்தது. இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா ராணியிடம் நெட்டிசன் ஒருவர் அவரின் உள்ளாடை சைஸ் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.

    neelima rani instagram aranmanai killi serial villi neelima reply for netizen suntv vijay tv actress neelimaesai

    அதற்கு நீலிமா, “நான் ஏன் உனக்கு சொல்ல வேண்டும். நீ விற்க போறீயா?” என பதில் கொடுத்துள்ளார். நீலிமாவின் இந்த பதிலுக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பலரும் இதுப்போல் கொச்சையாக கேள்வி கேட்பவர்களுக்கு அப்ப அப்பவே தகுந்த பதிலை கொடுத்துவிட வேண்டும் என கூறி நீலிமாவின் தைரியத்தையும் பாராட்டியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி