கர்ப்பிணியாக இருக்கும் போது நடிகை நீலிமா எடுத்த தைரியமான முடிவு..குவியும் பாராட்டுக்கள்!

கணவருடன் நீலிமா

சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.

 • Share this:
  நடிகை நீலிமா, திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.

  தற்போது வரை ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றுள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

  இவர் தற்போது நீல்ஸ் என்ற யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நீலிமா அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்கள் ஷேர் செய்து வருகிறார். தற்போது சீரியல்களிலும் நடித்து வரும் இவர், சமீபத்தில் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார். தனது திருமண நாளை முன்னிட்டு இன்ஸ்டாவில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து, அதில் வரும் ஜனவரியில் நாங்கள் நால்வராக போகிறோம்.

  20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி! ” என இரண்டாவது குழந்தையின் வரவு குறித்த தகவலை ஷேர் செய்திருந்தார். இதையடுத்து நீலிமாவிற்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி இருந்தனர். இந்த நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்தியது குறித்த தகவலை பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் நான் மிகவும் முக்கியமான தகவலை கூற தான் இந்த வீடியோவை ஷேர் செய்கிறேன், நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன், 21 வாரங்கள் கடந்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ளேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அரசாங்கம் மற்றும் எனது குடுப்பதினர் அறிவுறுத்தலின் பேரில் எனது முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்து கொண்டேன். முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள எனக்கு சற்று தயக்கமாக இருந்தது. ஆனால் என்னுடைய மகப்பேறு மருத்துவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அவருடைய அறிவுரைக்கு ஏற்ப நான் இன்று கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டேன். தற்போது கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் அவசியம் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். அது நமக்கும் குழந்தைக்கும் நிச்சயம் பாதுகாப்பானது என விளக்கியுள்ளார்.

  மேலும் நான் தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர் எனக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. நீலிமா ஊசி போட்டுட்டு நல்லாதான் இருக்காங்க'னு என்னைப் பார்த்து, ஊசிக்கு பயப்படுறவங்க புரிஞ்சுப்பாங்கன்னு தோணுச்சு. அதனால தான் அந்த விஷயத்தை ஷேர் பண்றேன் என அந்த வீடியோவில் கூறியுள்ளார். நீலிமா சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி 'அதிதி ஆயுர்வேதா'ன்னு பர்சனல் ஸ்கின் கேர் ஹேர் கேர் புராடக்ட்ஸ் லான்ச் பணிகளும் ஈடுபட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: