கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நாளை இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைப்பெறவுள்ளது. இந்த நேரத்தில் நயன் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் ஒன்று தான் மலையாள சேனல்களில் நயன், ஆங்கராக இருந்த நாட்கள். டயானா என்ற பெயரில் தான் நயன்தாரா நிகழ்ச்சிகளை மலையாள சேனலில் ஆங்கரிங் செய்து வந்தார்.
தங்கமே உன்ன தான்.. நயன்தாரா – விக்கியின் ரொமான்டிக் போட்டோஸ்..
இவரின் உண்மையான பெயர் ‘டயானா மரியா குரியன்’.ஆனால் சினிமா உலகிற்காக தனது பெயரை ’நயன்தாரா’ என மாற்றிக் கொண்டார். அதன் அர்த்தம். நட்சத்திர கண்களை உடையர் என்பதாம். 2003 ஆம் ஆண்டு முதன்முதலாக நயன் ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர் பின்னர் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியானார். முதல் படத்திலே நயனின் அழகு ரசிகர்களை கவர அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.
ரஜினி, விஜய், அஜித் என நயனின் சினிமா கெரியர் வளர, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும் துணிந்து நடிக்க தொடங்கினார். திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகை நயன் தான். காதல், பிரேக் அப் என ஒருபக்கம் சரிவை சந்தித்தாலும் சினிமா லைஃபில் நயன் என்றுமே ராணியாகவே திகழ்ந்தார். சின்ன கேப்புக்கு பின்பு 2வது ஆட்டத்தை சினிமாவில் தொடங்கியவர் தற்போது வரை அதே முதலிடத்தில் இருக்கிறார்.
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரை கரம் பிடிக்கும் விக்னேஷ் சிவன்… யார் இவர்?
இதற்கு நடுவில் தான் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நயன் காதலில் விழ, இப்போது திருமணம் வரை சென்றுள்ளது. நாளைய தினம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அதில் நயன் - விக்கி திருமணம் நடைப்பெறவுள்ளது. திருமணத்திற்கு விஜபிக்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.