சீரியலில் வில்லி.. ஃபிட்னஸில் கில்லி - நாயகி சீரியல் அனுவின் ஃபிட்னஸ் ரகசியம்

ஷூட்டிங் செட்டில் என்னை அனைவரும் ராபிட் என்று கிண்டல் செய்வார்கள்

Sivaranjani E | news18
Updated: May 17, 2019, 2:57 PM IST
சீரியலில் வில்லி.. ஃபிட்னஸில் கில்லி - நாயகி சீரியல் அனுவின் ஃபிட்னஸ் ரகசியம்
அனு என்னும் பிரதீபா
Sivaranjani E | news18
Updated: May 17, 2019, 2:57 PM IST
இன்றைய திரை மாற்றம் என்பது சின்னத்திரை சீரியலையும் விட்டுவைக்கவில்லை. காலத்திற்கு ஏற்ப சீரியல் கதாபாத்திரங்கள், கதைக் கரு என எல்லாமே தன்னுடைய டெம்ப்லேட்டிலிருந்து விலகிப் பயணிக்கிறது என்றே சொல்லலாம்.

அப்படி ஒரு அம்சம்தான் வில்லி கதாபாத்திரம். பொதுவாக சீரியலில் வரும் வில்லிகள் என்றாலே 30 வயதைக் கடந்தவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் இவரோ 26 வயதிலேயே சீரியலின் முன்னணி வில்லியாக இருக்கிறார். அதுவும் மக்கள் மனம் கவர்ந்த வில்லி.

சன் டிவியில் ஒளிபரப்பப்படும் நாயகி சீரியலின் வில்லியைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறேன். வில்லியாக நடிக்கும் அனு என்கிற பிரதீபா நடிப்பில் மட்டுமல்ல தனது உடல் ஃபிட்னெஸ் விஷயத்திலும் கில்லியாக இருக்கிறார்.
அவர் திரையில் தோன்றும்போதே அனைவருக்கும் எப்படி இத்தனை ஃபிட்டாக இருக்கிறார் என்கிற கேள்வி எழும். அந்தக் கேள்வியை நேரடியாக அவரிடமே முன் வைத்தபோது “ சிறு வயது முதலே உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பேன். இது என் அம்மா சொல்லிக் கொடுத்த நல்ல விஷயம். இன்று என் திரைத்துறை வரை பயன்படுகிறது என்கிறார் பிரதீபா.

பொதுவாக உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாலே உடற்பயிற்சிக் கூடங்கள் செல்வார்கள் அல்லது டயட் கடைப் பிடிப்பார்கள். ஆனால் பிரதீபா இவை எதுவும் இல்லாமலேயே உடலைப் பிட்டாக வைத்துக் கொள்கிறார்.  எனக்கு உணவில் கட்டுப்பாடுகள் என்று எதுவுமே கிடையாது. கிடைக்கும் அனைத்தையும் ரசித்துச் சாப்பிடுவேன். ஆனால் எது சாப்பிடுவதாக இருந்தாலும் அளவோடு சாப்பிடுவேன். அதுதான் என் ஃபிட்னெஸ் ரகசியமும் கூட.. என ரகசியத்தை உடைக்கிறார் பிரதீபா.

Loading...

குறிப்பாகப் பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளை அதிகமாகச் சாப்பிடுவேன். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இதுபோன்ற உணவுகளைத் தான் சாப்பிடுவேன். இதனால் செட்டில் என்னை அனைவரும் ராபிட் என்று கிண்டல் செய்வார்கள் என்று புன்னகைக்கிறார் பிரதீபா.
பிரதீபாவிற்கு எந்த உணவு உண்டாலும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறதாம். அது வெயில் காலமாக இருந்தாலும் வெந்நீர் மட்டும்தான் குடிப்பாராம். ”இதனால் உடல் இலகுவாகவும், தேவையற்ற கொழுப்புகள் நீங்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும்” என மருத்துவ தகவலும் அளிக்கிறார்.

அசைவ உணவுகளையே சாப்பிட மாட்டீர்களா என்ற கேள்விக்கு “ நோ நோ கட்டாயம் சாப்பிடுவேன். ஆனால் சைவ உணவுகள் மீது பிரியம் அதிகம் என்கிறார். நான் உடற்பயிற்சிக் கூடங்கள் செல்லாததும், குறிப்பிட்ட டயட்டைக் கடைப்பிடிக்காததற்கும் காரணம் உணவில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். இந்த வயதில்தான் எல்லாவற்றையும் சுவைத்து அனுபவிக்க முடியும் என்று சொல்வதோடு..பட்... அதில் லிமிட் மிக மிக அவசியம் அப்போதுதான் ஃபிட்டாக உடலை பராமரிக்க முடியும் என்கிறார் பிரதீபா.உங்களுக்கு உடற்பயிற்சிக் கூடங்கள் செல்லும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு “ இதற்கு முன் இருந்ததில்லை. தற்போது நடிகை சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பார்க்கும்போது எனக்கும் அந்த ஆசை வருகிறது. உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் சமந்தாவைப் போல் இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த ஃபிட்னஸ் நாயகியும் சமந்தாதான் என்கிறார்.

இன்றைய இளைஞர்களும் ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் உணவைச் சரியாக எடுத்துக்கொள்வதில்லை. தன்னையே வருத்திக்கொள்கின்றனர். அது ஆரோக்கியமான டயட் கிடையாது. குறிப்பாகக் காலை உணவைத் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். இன்று பலரும் செய்யும் தவறு அதுதான். எனக்கு விடியற்காலை ஷூட்டிங் என்றாலும் பழங்களையாவது உண்பேன்.

பிடித்த உணவை அளவாக, பசித்த நேரத்தில் மிஸ் பண்ணாமல் சாப்பிட்டால்தான் உடல் ஃபிட்டாகவும் இருக்கும், ஆரோக்கியமாகவும் இருக்கும். உங்களுக்கேத் தெரியும் உணவு போதும் என்று... அதையும் மீறி, இருக்கிறதே என்று சாப்பிடும் எக்ஸ்ட்ரா உணவுகள் அனைத்துமே உடல் எடையை அதிகரிக்கும் என ஃபிட்னெஸ் டிப்ஸ் அளிக்கிறார்.
First published: May 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...