சைக்கோ டூ சீரியல் வில்லி... நாயகி சீரியல் அனன்யா சின்னத்திரைக்கு வந்த கதை!

நாயகி சீரியல் அனன்யா

தற்போது விஜய்டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார்

 • Share this:
  சின்னத்திரை யங் வில்லி என பெயரெடுத்த நாயகி சீரியல் புகழ் அனன்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் இதோ

  சின்னத்திரையில் எப்போதுமே வாய்ப்புகள் அதிகம். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் போதும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிடலாம். அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்த நடிகைகள் மத்தியில் இந்த வில்லியும் ஒருவர். ரசிகர்கள் இந்த வில்லியை பயங்கரமாக ரசித்தனர்.இவர் சீரியலில் வரும் போது அணிந்திருந்த ஆடைகளை பற்றி கூட சோஷியல் மீடியாவில் பேச்சுக்கள் உலாவின. அவர் தான் சின்னத்திரை யங் வில்லி சுஷ்மா நாயர். சன் டிவியில் ஒளிப்பரப்பான நாயகி சீரியலில் அனன்யா ரோலில் நடித்தவர்.

  இவரின் சொந்த ஊர் கேரளா. ஆனால் படித்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். சினிமா மீது இருந்த ஆசையால் சிறு வயதிலே டான்ஸ், ,நடிப்பு என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார். பள்ளி மற்றும் கல்லூரி காலத்திலே நிறைய ஸ்டேஜ் ப்ரோகிராமில் பங்கேற்றுள்ளார்.ஃபேஷன் டிசைனிங் முடித்த இவர், அதை வைத்தே சினிமாவில் நுழைந்தார். கன்னடத்தில் சில படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணிப்புரிந்தார். அப்போது கன்னடத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு வந்தது. அப்படியே தனது சினிமா பயணத்தை வெள்ளித்திரையில் ஆரம்பித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சைக்கோ படத்தில் இவரின் நடிப்பை பார்த்து தான் தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிப்பரப்பான சுமங்கலி தான் இவரின் முதல் சீரியல். அதன் பின்பு நாயகி சீரியலில் அனன்யாவாக நடித்தார். நெகட்டிவ் ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சின்னத்திரையில் சிறந்த வில்லிக்கான விருதும் வாங்கியுள்ளார். நடிப்பை தொடர்ந்தாலும் தான் படித்த ஃபேஷன் டிசைனிங்கை விடவில்லை.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Sushma Nair இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sushmanair07)


  பேஷன் ஷோக்களுக்கு தொடர்ந்து ஆடை வடிவமைப்பாளராக இருந்து வந்தார். சீரியலில் இவர் அணியும் அனைத்து ஆடைகளும் இவருடையது தான். தனியாக பொட்டிக்கும் நடத்தி வருகிறார். தற்போது விஜய்டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் என்ட்ரி ஆகியுள்ளார். சுஹாசினி என்ற ரோலில் மீண்டும் சின்னத்திரையில் பிஸியாகி விட்டார். திருமணமான இவர், தனது கணவரின் துணையுடன் சைலண்டாக இத்தனை சாதனைகளையும் செய்து வருகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: