Home /News /entertainment /

காதலுக்கு மரியாதை.. புது ஜோடி நவீன் - கண்மணி செய்த காரியம்!

காதலுக்கு மரியாதை.. புது ஜோடி நவீன் - கண்மணி செய்த காரியம்!

நவீன் - கண்மணி

நவீன் - கண்மணி

கல்யாணம் முடிந்த உடன் காதலர்களுக்கு மிகவும் பிடித்த தாஜ்மகாலுக்கு இருவரும் சென்றது சூப்பர்

    சின்னத்திரையின் லேட்டஸ்ட் புதுமண ஜோடியான கண்மணி - நவீன் ஹனிமூன் ட்ரிப்புக்கு  ஆக்ராவில் இருக்கும் தாஜ்மகாலுக்கு சென்றுள்ளனர். காதல்  சின்னமாக பார்க்கப்படும் தாஜ்மகாலில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக  கலக்கி கொண்டிருக்கும் சஞ்சீவ் - ஆல்யா மானசா, ஷபானா- ஆர்யன், சித்து - ஸ்ரேயா ஜோடிகளைப் போல் நவீன் - கண்மணியும் தவிர்க்க முடியாத ஜோடியாக தற்போது மாறிவிட்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை ஆனால் இருவரும் சின்னத்திரையில் வெவ்வேறு சேனல்களில் பணியாற்றுகிறார்கள். இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நவீன். அதே போல் சீரியல் நடிகைகளின் அளவுக்கு டெலிவிஷனில் பிரபலமாக இருப்பவர் செய்தி வாசிப்பாளர் கண்மணி. இவரின் க்யூட்டான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஏராளமானோரை  கவர்ந்திழுந்துள்ளது.

    6 வருடமாக அந்த நடிகையின் மகனுக்கு விஷால் செய்து வரும் மிகப் பெரிய உதவி!

    சில மாதங்களுக்கு முன்பு நவீன் - கண்மணி இருவரும் ஒரு ரகசியத்தை ரசிகர்களுக்கு ஓபன் செய்தனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக பங்கேற்ற இருவரும், தாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தனர். அதிலும் கண்மணி “எங்க அப்பாவுக்கு பிடித்தது போல் ஒருவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என காத்துக்கொண்டிருந்தேன். என் அப்பாவை போல ஒருத்தர் கிடைத்துவிட்டார்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    navin wife kanmani instagram pic going viral kanmani sekhar navin kumar honeymoon delhi shimla NK
    கண்மணி - நவீன்


    navin wife kanmani instagram pic going viral kanmani sekhar navin kumar honeymoon delhi shimla NK
    கண்மணி - நவீன்


    இருவருக்கும் ஏப்ரலில் நிச்சயதார்த்தம முடிந்தது. ஜூன் 10 ஆம் தேதி இருவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு சின்னத்திரை பிரபலங்களும் பங்கேற்றனர். இந்நிலையில் புதுமண ஜோடி  இருவரும் ஹனிமூன் ட்ரிப்புக்கு டெல்லி, சிம்ளா சென்றுள்ளனர். திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவியாக இருவரும் ஒன்றாக செல்லும் முதல் பயணம் என்று நவீன் தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டு இருந்தார்.

    navin wife kanmani instagram pic going viral kanmani sekhar navin kumar honeymoon delhi shimla NK
    கண்மணி - நவீன்


    இந்நிலையில் இருவரும் தாஜ்மகாலில் மினி ஃபோட்டோ ஷூட்டே நடத்தி முடித்துள்ளனர். இந்த புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர். கல்யாணம் முடிந்த உடன் காதலர்களுக்கு மிகவும் பிடித்த தாஜ்மகாலுக்கு இருவரும் சென்றது சூப்பர் என ரசிகர்கள் வாழ்த்தி கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி