பிரபல சின்னத்திரை ஜோடிகளான நவீன் - கண்மணி நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சின்னத்திரை நாயகனாக மாறி இருக்கும் நவீனுக்கும், நியூஸ் ரீடர் கண்மணி மனோகரனுக்கும் இன்று நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சின்னத்திரையில் பிஸியாக வலம் வரும் இருவரும் ஏற்கெனவே தங்களது திருமணம் குறித்து அறிவித்து இருந்தனர். இந்நிலையில் இன்று பெரியோர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. இவர்களது திருமணம் காதல் திருமணமா? அரேஞ்சுடு மேரேஜா? என்ற சந்தேகம் இப்போது வரை ரசிகர்களுக்கு தீர்ந்த பாடில்லை.
இன்னும் முடியல… பெருந்தொற்றின் துவக்க காலத்தை தான் தாண்டியிருக்கிறோம் – உலக சுகாதார அமைப்பு பகீர்
இதயத்தை திருடாதே சிவா - சஹானா ஜோடி சின்னத்திரையில் பயங்கர வைரல். இவர்களின் கெமிஸ்ட்ரி ஆன் ஸ்கீரினில் வொர்க்கவுட் ஆன மாதிரியே நிஜத்திலும் ஆகும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நவீன், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற ஸ்டேட்டஸை முதலில் வெளியிட்டு அடுத்த 24 மணி நேரத்தில் கண்மணி தான் என் வருங்கால மனைவி என அறிமுகப்படுத்தினார். இது இதயத்தை திருடாதே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. பின்பு முறைப்படி நவீன் - கண்மணி திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிறைய ரசிகர்கள் உள்ளனர் . கண்மணி சன் டிவியில் நியூஸ் வாசித்துக் கொண்டிருக்கும் போதே அவரின் தமிழ் உச்சரிப்பால் இணையத்தில் வைரலானார். கிராமப்புற பிண்ணனியில் இருந்து வந்த இவர், கடின உழைப்பால் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார். அதே போல தான் நவீனும், பல் முயற்சிகளுக்கு பிறகு இப்போது மக்கள் நாயகனாக சின்னத்திரையில் வலம் வருகிறார்.
PM kisan status : ரூ.2,000 தரும் மத்திய அரசு.. பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?
இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இணைய இருப்பது அவர்களின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த ஜோடிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.