Home /News /entertainment /

டிவி சீரியலில் நடிக்க வரும் நாட்டாமை நடிகர்.. சேனல் டி.ஆர்.பி எகிற போகுது!

டிவி சீரியலில் நடிக்க வரும் நாட்டாமை நடிகர்.. சேனல் டி.ஆர்.பி எகிற போகுது!

நாட்டாமை விஜயகுமார்

நாட்டாமை விஜயகுமார்

இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் ஊர் நாட்டாமையாக விஜயகுமார் நடித்துள்ளார்.

    தமிழ் டிவி ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப மிகவும் பொழுதுபோக்கான பல நிகழ்ச்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. கிட்டத்தட்ட வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்கள். டிவி சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் சீரியல்கள் தான் டாப் லிஸ்ட்டில் இருந்து வருகின்றன. எத்தனையோ வித விதமான நிகழ்ச்சிகள் இருந்தாலும் தமிழ் ரசிகர்களையும், சீரியல்களை பல ஆண்டுகளாக பிரிக்க முடியவில்லை.

    இதனால் வெள்ளித்திரையில் கோலோச்சிய பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் மற்றும் மூத்த நடிகர்கள் என பல சினிமா நட்சத்திரங்கள் சீரியல்களை நோக்கி தொடர்ந்து படையெடுத்தபடியே உள்ளனர். தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகுமார். தமிழ் சினிமாவில் பல வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் விஜயகுமார், 2009-ஆம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சி உலகிற்கு அடியெடுத்து வைத்தார். நடிகை ரம்யாகிருஷ்ணனின் தந்தை வேடத்தில் தங்கம் சீரியலில் நடித்தார். ஏற்கனவே தங்கம், வம்சம், நந்தினி, ராசாத்தி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் 5 வீட்டில் நடந்தது இதுதான்.. சிபி, அமீர், பாவ்னி பற்றி புட்டு புட்டு வைக்கும் ராஜூ!

    இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையை விட்டு ஒதுங்கியிருந்த நடிகர் விஜயகுமார் தற்போது மீண்டும் சீரியலுக்கு வந்துள்ளார். 2018 முதல் 2021 வரை ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ஹிட் சீரியல் "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி".

    இந்த சீசனின் கதை இந்தி மொழி தொடரான 'போதோ பகி' என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த சீரியலின் இரண்டாம் சீசன் "ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி" என்ற பெயரில் கடந்த அக்டோபர் 25, 2021 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது நடிகர் விஜயகுமார் ஒரு ஊருல இரண்டு ராஜகுமாரி சீரியலில் இணைந்து உள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by zeetamil (@zeetamizh)






    இந்த சீரியலில் சிறப்பு தோற்றத்தில் ஊர் நாட்டாமையாக விஜயகுமார் நடித்துள்ள ப்ரமோ வீடியோ  சின்னத்திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஜயகுமாரை தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகரான போண்டா மணி-யும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சீரியலில் நடித்து இருக்கிறார். பவுனு பவுனுதான் திரைப்படம் மூலம் துணைநடிகராக அறிமுகமான போண்டா மணி, நடிகர் வடிவேலுவுடன் இணைந்தும், தனியாகவும் காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார்.

    போண்டா மணி


    கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் எங்க வீட்டு மீனாட்சி சீரியலில் பாம்பு பால்ராஜ் என்ற பெயரில் பாம்பு பிடிப்பவராக நடிக்கிறார். நீண்ட நாட்கள் கழித்து 2 வெள்ளித்திரை நடிகர்கள் மேம்படும் சீரியலில் நடிக்க துவங்கி இருப்பது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Actor Vijayakumar, Zee tamil

    அடுத்த செய்தி