விஜய் டிவி பிரபலங்கள் தொடர்ந்து புது கார் வாங்கும் செய்திகள் பலரின் கவனத்தை பெற்றுள்ளன. அந்த வரிசையில் இணைந்துள்ளார் மற்றொரு விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன்.
விஜய் டிவி பிரபலங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைப்பதை பார்க்க முடிகிறது. அது சீரியல் பிரபலங்களாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோ பிரபலங்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு பிடித்து விட்டால் போதும், தூக்கி கொண்டாட தொடங்கி விடுவார்கள். அதிலும் குறிப்பாக காமெடி நிகழ்ச்சிகளான கலக்க போவது யாரு? கலக்க போவது சாம்பியன்ஸ், சிரிச்சா போச்சு நிகழ்ச்சிகளில் காமெடி செய்யும் நடிகர்கள் மக்களுடன் மிகவும் நெருக்கமாக பழக்குவதை பார்க்க முடிகிறது. அவர்கள் பொதுவெளியில் சென்றால் கூட ரசிகர்கள் ஓடி சென்று அந்த காமெடி பற்றி பேசி வாழ்த்துகிறார்கள்.
இதையும் படிங்க.. பாக்கியா வீட்டுக்கு வரும் ராதிகா... கோபி மாட்டபோகும் நேரமா இது?
அந்த வரிசையில்
விஜய் டிவி ராமர், அமுதவாணன், பாலாஜி, நாஞ்சில் விஜயன், தீனா போன்றவர்கள் மக்களின் ஃபேவரெட். இதில் நாஞ்சில் விஜயனை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அடிக்கடி பெண் வேடமிட்டு காமெடியில் கலக்குவார். இவரும் ராமரும் சேர்ந்து செய்த ’சொல்வதெல்லாம் பொய் மேலே வைக்காத கை’ காமெடி எபிசோடு யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. தங்களது காமெடி மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் இதுப்போன்ற கலைஞர்களுக்கு வெள்ளித்திரையிலும் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க.. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என்ன ஆச்சு? கடுப்பில் ரசிகர்கள்!
வெறும் விஜய் டிவியில் மட்டுமில்லை நாஞ்சில் விஜயன் யூடியூப்பில் பல ஷார்ட் ஃபிலிம்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கென்றே நாஞ்சில் விஜயனுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. தற்போது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் வள்ளி திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நாஞ்சில் விஜயன்
புது கார் ஒன்று வாங்கி உள்ளார். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு பல கஷ்டங்களை கடந்து நாஞ்சில் விஜயன் இந்த நிலையை அடைந்திருக்கிறார். அதுக் குறித்து மிகவும் உருக்கமாக நாஞ்சில் விஜயன், தனது இன்ஸ்டா போஸ்டில் பதிவு செய்துள்ளார். ”பல கனவுகளுடன் சென்னைக்கு ரயில் ஏறி வந்தேன். அப்போது டாய்லெட் பக்கத்தில் இருந்த சின்ன இடத்தில் அமர்ந்தப்படியே என் பயணம் இருந்தது. இப்போது என் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.