சன் டிவி ’அபியும் நானும்’ சீரியலில் நந்திதா ஸ்வேதா!

நந்திதா ஸ்வேதா

வரும் ஞாயிறன்று மதியம் 2 மணிக்கு, ‘அபியும் நானும்’ சீரியலின் சிறப்பு ஒரு மணி நேர காட்சி சன் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது.

  • Share this:
    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’அபியும் நானும்’ சீரியலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா.

    சீரியலின் விறுவிறுப்பை கூட்ட, பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்க சினிமா நட்சத்திரங்கள் சில காட்சிகளில் நடிப்பது வழக்கம். கடந்த வாரம் சன் டி.வி-யில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு, ‘கண்ணான கண்ணே’ சீரியலின் சிறப்பு காட்சி ஒளிபரப்பானது. இந்த ஒரு மணிநேர சிறப்பு காட்சியில், பிரபல பிக்பாஸ் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் போலீசாக தோன்றி சண்டைக் காட்சிகளில் எல்லாம் ஈடுபட்டு அசத்தினார். அந்த சீரியலின், அதே காட்சியில் நடிகர் ரியாஸ் கானும் நடித்திருந்தார்.

    இந்நிலையில் மீண்டும் ஒரு நட்சத்திரம் சீரியலில் நடிப்பதை ப்ரோமோவில் வெளிப்படுத்தியுள்ளது சன் டிவி. ஆம்... வரும் ஞாயிறன்று மதியம் 2 மணிக்கு, ‘அபியும் நானும்’ சீரியலின் சிறப்பு ஒரு மணி நேர காட்சி சன் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பிரபல இளம் ஹீரோயின் நந்திதா ஸ்வேதா சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடித்த ‘அட்டகத்தி’ திரைப்படம் மூலம் பிரபலமான நந்திதா ஸ்வேதா, பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தின் மூலம் இன்னும் புகழ் பெற்றார். சமீபத்தில் செல்வராகவன் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: