• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான் - உண்மையை சொன்ன நந்திதா ஜெனிஃபர்!

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான் - உண்மையை சொன்ன நந்திதா ஜெனிஃபர்!

ஜெனிபர்

ஜெனிபர்

இதனிடையே சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறி உள்ள ஜெனிஃபர், இதுவரை அப்பாவித்தனமாக, சாந்தமாக சென்று கொண்டிருந்த ராதிகா கேரக்டர் இனி வில்லத்தனம் செய்ய போவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி சீரியல்களை மக்கள் தவறாமல் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். இதில் இல்லத்தரசிகளின் மனங்கவர்ந்த பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. திங்கள் - சனி இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு பெண் ரசிகர்கள் மிக அதிகம். ஏனென்றால் அப்பாவி குடும்ப தலைவியாக இருக்கும் பாக்கியா. தனது குடும்ப உறுப்பினர்களுக்காக எப்படி எல்லாம் தன்னை வருத்தி கொண்டு கஷ்டப்படுகிறார் என்பதை காட்டும் யதார்த்த குடும்ப கதையாக இருக்கிறது.

இதில் பாக்கியலட்சுமி என்ற கேரக்டரில் நடிகை சுசித்ரா ஷெட்டி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பெண்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவு பெற்றுள்ளார். பாக்கியலட்சுமியின் கணவராக கோபி என்ற கேரக்டரில் நடிகர் சதீஷ்குமார் நடித்து வருகிறார். இவர் தனது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல், தனது முன்னாள் காதலி மற்றும் தோழியான ராதிகாவுடன் நேரம் செலவழிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இருவருக்கும் தவறான உறவு இருப்பதாக இதுவரை காட்டப்படவில்லை. முன்னாள் காதலன் என்ற வகையில் கணவனை பிரிந்து மக்களுடன் வாழும் ராதிகா, கோபியுடன் நட்பாக தான் பழகி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ராதிகாவும் - பாக்கியாவும் நெருங்கிய தோழிகளாகி விடுவதால் கோபியின் பாடு திண்டாட்டமாக பொய் கொண்டிருக்கிறது. பாக்கியா கேரக்டர் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்ததோ அதே அளவிற்கு ராதிகா கேரக்டரும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இந்த கேரக்டரில் முன்பு நடித்தவர் வெள்ளித்திரை நடிகையும் மற்றும் டான்ஸருமான நந்திதா ஜெனிஃபர். இவருக்கும் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் பெருகினர்.

ஆனால் சில நாட்களுக்கு முன் இவர் இந்த சீரியலில் இருந்து திடீரென்று விலகியதால், ராதிகா கேரக்டரில் பிக்பாஸ் தமிழ் சீசன் 3-ல் பங்கேற்ற ரேஷ்மா நடித்து வருகிறார். அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெனிஃபர், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய பின்னர், மீண்டும் அதே சீரியலில் தொடர வலியுறுத்தி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளார்.

Also read... சன் டிவி-யின் அன்பே வா சீரியலில் விரைவில் தோன்ற போகும் பிரபல மூத்த நடிகை!

இதனிடையே சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை கூறி உள்ள ஜெனிஃபர், இதுவரை அப்பாவித்தனமாக, சாந்தமாக சென்று கொண்டிருந்த ராதிகா கேரக்டர் இனி வில்லத்தனம் செய்ய போவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே வில்லத்தனமான வேடத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனவே தான் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் இவர், திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரை மூலம் இவ்வளவு புகழும், அன்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் நலன் கதையம்சத்துடன் கூடிய சிறப்பான ரோல் கிடைத்து சின்னதிரையில் நடிப்பை தொடர ஆவலாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: