Home /News /entertainment /

நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் அந்த பிரபலத்தின் கணவர்.. நீங்க நோட் பண்ணி இருக்கீங்களா?

நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் அந்த பிரபலத்தின் கணவர்.. நீங்க நோட் பண்ணி இருக்கீங்களா?

நம்ம வீட்டு பொண்ணு

நம்ம வீட்டு பொண்ணு

தன் மனைவிக்காக முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

    நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் mr & mrs நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கிய பாடகி ரோஷினியின் கணவர் ஜாக் நடித்து வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

    விஜய் டிவியில் பலரின் உள்ளம் கவர்ந்த குடும்ப சீரியலாக இருந்து வருகிறது ’நம்ம வீட்டு பொண்ணு’. அகிரிமெண்ட் முறையில் திருமண பந்தத்தில் இணையும் கார்த்திக் மற்றும் மீனாட்சியை சுற்றி தான் மொத்த கதையும் அரங்கேறும். குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். டாம் அண்ட் ஜெர்ரி போல் மீனாட்சியும் கார்த்திக்கும் அடித்துக் கொள்ளும் ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி இணையத்தில் படு வைரல். இந்த சீரியலில் இயக்குனர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் . இன்ஸ்டாகிராமில் டிக் டாக் வைரல் பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர்.

    என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!

    இவர்களுடன் சேர்ந்து ஜாக்கும் இந்த சீரியலில் சிவகாந்த் என்ற ரோலில் நடித்து வருகிறார். ஜாக் வேற யாருமில்லை பாடகி ரோஷினியின் கணவர் தான். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான mr & mrs நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை வந்தனர். இதன் மூலம் இந்த ஜோடிக்கு நிறைய ஃபேன்ஸ் ஃபாலோவர்ஸ் கிடைத்தனர். இந்த நிகழ்ச்சியின் போதே ஜாக் அடிக்கடி, தனக்கு நடிப்பில் தான் ஆர்வம் என சொல்வார். நிகழ்ச்சியின் நடுவர்களான தேவதர்ஷினியும் கோபிநாத்தும் ஜாக்கை அப்போதே ஊக்கப்படுத்தி இருந்தனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Jack (@actorjack_official)






    இந்நிலையில் ஜாக் தனது சினிமா கெரியரை சின்னத்திரை தொடங்கிவிட்டார். இவர் நம்ம வீட்டு பொண்ணு சீரியல் மூலம் அரிதாரம் பூசி விட்டார். கடந்த சில மாதங்களாக சிவாந்த் ரோலில் ஜாக் நடித்து வருகிறார். ஆனால் பலருக்கும் இதுக் குறித்து அதிகம் தெரியவில்லை. அதுமட்டுமில்லை, தற்போது தான் சீரியலில் அதிரடி திருப்பமாக சிவாந்துக்கு முக்கியத்துவம் தரும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.  அடுத்து மீனாட்சி தலைமையில் நடக்க போகும் ராஜேஷ் கல்யாணத்தில் ஜாக்கால் பல திருப்பங்கள் சீரியலில் அரங்கேற போகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    ஜாக் அமெரிக்காவில்ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அபோது தான் தன் மனைவிக்காக முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இப்போது அவரின் கெரியராகவும் சினிமாவை தேர்ந்தெடுத்துவிட்டார்.அதுமட்டுமில்லை தனது இன்ஸ்டா பக்கத்தை ஆக்டர் என்றும் புரஃபைலை மாற்றி விட்டார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி