ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து விலகிய நடிகை! இதுதான் காரணமா?

நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து விலகிய நடிகை! இதுதான் காரணமா?

நம்ம வீட்டு பொண்ணு

நம்ம வீட்டு பொண்ணு

சுந்தரி சீரியலில் சுதாவாக நடிக்கும் லைலா இனி திவ்யாவாக நடிக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நம்ம வீட்டு பொண்னு சீரியலில் திவ்யா ரோலில் நடித்து வந்த சின்னத்திரை நடிகை ஷெரின் சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் சுந்தரி புகழ் லைலா இனி திவ்யாவாக நடிக்கவுள்ளார்.

எண்ணற்ற ஹிட் சீரியல்கள் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது விஜய் டிவி. இதில் மதிய நேரத்தில் ஒளிப்பரப்பாகும் சீரியல் ‘நம்ம வீட்டு பொண்ணு’ . இதில் கார்த்திக் என்ற கேரக்டரில் நடிகர் சுர்ஜித் குமார் நடிக்கிறார். சுர்ஜித் குமார் தவிர "நம்ம வீட்டு பொண்ணு" சீரியலில் ராஜா ராணி சீரியலில் வடிவு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷப்னம், நடிகை அஷ்வினி ஆனந்திதா, அருணிமா சுதாகர், அம்ருதா, நித்தியா ரவிந்தர், வைஷாலி தணிகா, சந்தியா விஜே மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர். முக்கியமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் பிரபல சீரியல் நடிகர் வெங்கட் நம்ம வீட்டு பொண்ணு மூலம் மீண்டும் சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

கலர்ஸ் தமிழின் ’போட்டிக்கு போட்டி’ ... நடுவராக இணைந்த ஸ்ரீதர் மாஸ்டர்!

இந்த சீரியலின் கதை என்னவென்றால் அகிரிமெண்ட் முறையில் திருமண பந்தத்தில் இணையும் கார்த்திக் மற்றும் மீனாட்சியை சுற்றி நடக்கும் நிகழ்வுகள். இவர்களின் சண்டை, காதல், குடும்பம் இதை சுற்றி தான் கதை தற்போது நகர்ந்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இந்த சீரியலை அதிகம் விரும்பி பார்க்கின்றனர். டாம் அண்ட் ஜெர்ரி போல் மீனாட்சியும் கார்த்திக்கும் அடித்துக் கொள்ளும் ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி இணையத்தில் படு வைரல். இந்த சீரியலில் இயக்குனர் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார் . இன்ஸ்டாகிராம்,  டிக் டாக் வைரல் பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர்.

சக்தியுடன் வருணை சேர்த்து வைக்க கார்த்திக் கிருஷ்ணா படும் கஷ்டம்!

அந்த வகையில் இந்த சீரியலில் கார்த்திக்கின் முன்னாள் காதலி, மீனாட்சியின் அத்தை மகளாக திவ்யா ரோலில் நடித்தவர் சின்னத்திரை நடிகை ஷெரின். சின்னத்திரை நடிகையான இவர், திருமணம் சீரியல் மூலம் ரீச் ஆனார். அதன் பின்பு பாரதி கண்ணம்மா தொடரில் துளசி ரோலில் நடித்து வந்தார். இந்நிலையில் ஷெரின், நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)அவருக்கு பதில் சுந்தரி சீரியலில் சுதாவாக நடிக்கும் லைலா இனி திவ்யாவாக நடிக்கிறார். லைலாவின் அறிமுகம் நேற்று சீரியலில் காண்பிக்கப்பட்டது. அதே நேரம் ஷெரின் இந்த சீரியலில் இருந்து ஏன் விலகினார் என்ற காரணம் தெரியவில்லை. இந்நிலையில் ஷெரின் மீண்டும் துளசியாக பாரதி கண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் அதனால் தான் அவர் நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து விலகி இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Television, TV Serial, Vijay tv