நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நம்ம வீட்டு சீரியலில் நடிகர் வெங்கட் நடித்துள்ளார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்ஸஸ் கிளேர்ஸ் போன்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் பிஸியாக வலம் வந்தவர் நடிகர் வெங்கட். வெங்கட் - நிஷா இந்த ஜோடியை மறக்காத சின்னத்திரை ரசிகர்களே இல்லை எனலாம். 10 வருடத்திற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பல ஷோக்களில் வெங்கட் முகத்தை பார்க்கலாம். சின்னத்திரையில் தனக்கென தனி பாதை அமைத்துக் கொண்டு அதன் வழியே சென்றார். சன் டிவியில் ஒளிப்பரபான பல சீரியல்களில் லீட் ரோல் செய்திருக்கிறார்.
இவரின் அம்மா பிரபலமான மைதிலி பியூட்டி பாலர் நிறுவனர் ஆவார். சீரியல்களில் ரியாலிட்டி ஷோக்களில் நடித்திருக்கொண்டிருந்த போதே அவ்வப்போது தனது அம்மாவுக்கு உதவியாக அவரின் பணிகளை மேற்பார்வை செய்து வந்தார். இவரின் மனைவி நிஷாவும் ஜோடி நம்பர் ஓன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். ரியல் கப்பூல்ஸ் பிரிவில் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அந்த நடன நிகழ்ச்சிக்கு தங்களது மனைவிகளை அழைத்து வந்தனர். அதில் வெங்கட்டும் ஒருவர். இந்த எவர் கிரீன் கியூட் கப்பூல்ஸை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது ரசிக்காதவர்களே இல்லை எனலாம். இந்நிலையில், சின்னத்திரைக்கு நீண்ட ஆண்டுகள் குட் பாய் சொல்லிருந்த வெங்கட் இபோது மீண்டும் புத்தம் புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் இன்று முதல் பகல் 2.30 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ள தொடர், நம்ம வீட்டு பொண்ணு. இதில் கார்த்திக் என்ற கேரக்டரில் ஹீரோவாக நடிகர் சுர்ஜித் குமார் நடிக்கிறார். மீனாட்சி கேரக்டரில் நடிகை அஷ்வினி ஆனந்திதா, வேலாயுதம் என்ற கேரக்டரில் நடிகர் ரவி, விசாலாட்சியாக நடிகை நித்யா, செல்வியாக நடிகை பிரியதர்ஷினி, மலர் கேரக்டரில் வைஷாலி தணிகா, அனுவாக அருணிமா சுதாகர் நடிக்கின்றனர். ராஜா ராணி சீரியலில் நடித்த நடிகை ஷப்னம் இந்த சீரியலில் வடிவு என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
ராமநாதபுரம் டூ சென்னை.. சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் ஜெனிக்கு நிறைவேறாத ஆசைகள் ஏராளம்!
இவர்கள் அனைவருடனும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் வெங்கட். ஏற்கெனவே இந்த சீரியலுக்கு ஆதரவு தரும் படி, பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி சீரியல் நடிகர்கள் புரமோவில் தலைக்காட்டி விட்டனர். ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை பெற்ற இந்த தொடர், ரசிகர்களை கவருமா? இல்லையா ?என்பதை வரும் நாட்களில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv