Home /News /entertainment /

பாபநாசம் பட பாணியில் அரங்கேறும் திருப்பம்..பரபரப்பான கட்டத்தில் 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்'

பாபநாசம் பட பாணியில் அரங்கேறும் திருப்பம்..பரபரப்பான கட்டத்தில் 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்'

நம்ம மதுரை சிஸ்டர்ஸ்

நம்ம மதுரை சிஸ்டர்ஸ்

நம்ம மதுரை சிஸ்டர்ஸ் சீரியல் டெலிகாஸ்ட் ஆன நாள் முதலே விறுவிறுப்பாக செல்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ சீரியலில் ராஜமாணிக்கம் கொலை தொடர்பான பரபரப்பு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

    கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் மிகவும் புதுமையானதாக உள்ளன. அதனால் தான் பலரும் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களை பெரிதும் விரும்பி பார்க்கிறார்கள். அரைத்த மாவையே அரைக்காமல் புதிய புதிய கதைகளையும், கதாப்பாத்திரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றன. இது  கலர்ஸ் சேனலுக்கு கூடுதல் பலமாகவும் அமைகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகிய ஒரு சிறந்த தொடர்  'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்'.

    2வது குழந்தைக்கு தாயாகும் விஜய் டிவி சீரியல் பிரபலம்!

    இந்த சீரியல் டெலிகாஸ்ட் ஆன நாள் முதலே விறுவிறுப்பாக செல்கிறது. மதுரையைப் பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ‘நம்ம மதுரை சிஸ்டர்ஸ்’ நான்கு சகோதரிகளின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. மொத்த குடும்பத்தையும் வழிநடத்தும் மூத்த அக்கா இந்திராணியின் தங்கை, வில்லன் ராஜமாணிக்கத்தின்  மூத்த மகன் சிவகுமாரை கல்யாணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதில் இந்திராணிக்கு விருப்பமில்லை. இதனால் அவர் தங்கையை ஒதுக்கி வைத்து விட்டார். அதே போல் ராஜமாணிக்கத்தின் இளைய மகன் நந்தா, இந்திராணியின் கடைசி தங்கை காவ்யாவை கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறார்.

    சக்தி கண்டுப்பிடிக்கும் உண்மை.. மெளன ராகத்தில் ஸ்ருதிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

    இதில் ராஜமாணிக்கத்துக்கு விருப்பமில்லை. இப்போது கதைப்படி மதுரை சகோதரிகளுக்குச் சொந்தமான அன்னம் அங்காடியில் நந்தா வேலை செய்து வருகிறார். அவர் காவ்யாவை தான் திருமணம் செய்வேன் என அடம் பிரிக்கிறார். இந்நிலையில் ராஜமாணிக்கம் காவ்யாவை கொலை செய்ய நினைக்கிறார். அதை அவரின் மருமகள் கேட்டு விடுகிறார். கோபத்தில் ராஜமாணிக்கத்தை கொன்று விடுகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Colors Tamil (@colorstvt






    இந்த உண்மையை அழுதுக் கொண்டே இந்திராணியிடம் சொல்கிறார். பின்பு நான்கு பேரும் சேர்ந்து ராஜமாணிக்கம் உடலை மண்ணில் புதைத்து விடுகின்றனர். இது யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட பாபநாசம் படபாணியில் கொலையை மறைத்து விட்டனர். இந்த உண்மையை யார் கண்டுப்பிடிப்பார்? உண்மையில் ராஜ மாணிக்கம் இறந்து விட்டாரா? போன்ற பல கேள்விகளுக்கு வரும் வார எபிசோடில் பதில் கிடைக்க போகுது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், TV Serial

    அடுத்த செய்தி