• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • அந்த மனசு தான்யா கடவுள்.. சிகிச்சை முடிந்த கையுடன் பொதுசேவையில் இறங்கிய நமீதா மாரிமுத்து!

அந்த மனசு தான்யா கடவுள்.. சிகிச்சை முடிந்த கையுடன் பொதுசேவையில் இறங்கிய நமீதா மாரிமுத்து!

பிக் பாஸ் நமீதா

பிக் பாஸ் நமீதா

நமீதா மாரிமுத்து எதுவும் பதில் கொடுக்க மறுக்கிறார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

 • Share this:
  பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா மாரிமுத்து, சாலையோர குழந்தைகளுக்கு புதிய துணி வாங்கிக் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா, இமான் அண்ணாச்சி, சின்னப்பொண்ணு, நடிகை அக்ஷரா உள்ளிட்ட 18 பிரபலங்கள் இந்த வீட்டிற்குள் சென்றனர். முதன்முறையாக திருநங்கைகளின் குரலை ஒலிக்கும் விதமாக நமீதா மாரிமுத்துவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

  கடந்து வந்த பாதை போட்டியில் ஒவ்வொரு போட்டியாளர்களும், தங்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்கள், போராட்டங்கள் குறித்து பேசியதில் நமீதாவின் வாழ்க்கை பொதுவெளியில் பலருக்கும் அனுதாபத்தை தேடி தந்தது. சமூகவலைதளங்களிலும் நமீதா மாரிமுத்துவுக்காக ஆதரவு குரல்கள் எழத் தொடங்கியது. இந்த நேரத்தில் தான் திடீரென பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியேறினார். அவர் வெளியேறியதற்கான காரணத்தை விஜய் டிவி இதுவரை கமுக்கமாகவே வைத்துள்ளது. நமீதா மாரிமுத்துவும் வாய்திறக்கவில்லை.

  எனினும், உடல்நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சியில் வெளியேறியதாக கூறப்பட்டது. குறிப்பாக, போட்டியாளர்களுள் ஒருவரான தாமரை விளையாட்டாக கூறிய வார்த்தை ஒன்று நமீதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனால், ஆவேசமடைந்த நமீதா, வீட்டில் உள்ளவர்களிடமும் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நமீதா, மருத்துவமனைக்கு சென்று ஒரு வாரமாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதன்பின் வீடு திரும்பினார். அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வாரா? அல்லது செல்லமாட்டாரா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

  அவர் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்த வைஷூ என்ற திருநங்கை, நமீதா வைல்ட் கார்டில் மீண்டும் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், இந்த தகவல் உறுதியாக தெரியாத நிலையில் நமீதா மாரிமுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாலையோரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு புதிய துணிகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.   
  Instagram இல் இந்த இடுகையைக் காண்க

   

  Namitha Marimuthu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@namithamarimuthu)


  சின்ன குழந்தை ஒன்றுக்கு அவரே துணிகளை போட்டும் விடுகிறார். இதன் மூலம் நமீதா மிகவும் நலமாக இருக்கிறார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொண்டதுடன் அவரின் மனிதநேயமிக்க செயலை பாராட்டியுள்ளனர். அதேநேரத்தில் மீண்டும் பிக்பாஸூக்கு செல்வீர்களா? என ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுத்து வருகிறார். ஒருவேளை பிக்பாஸ் முடியும் வரை வாய்திறக்கக்கூடாது என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கலாம், அதனால் தான் நமீதா மாரிமுத்து எதுவும் பதில் கொடுக்க மறுக்கிறார் என்றும் சிலர் கூறுகின்றனர். எதுவாயினும், நமீதாவின் வெளியேற்றம் மர்மமாகவே இருப்பதால், அது குறித்து அவரே பதில் அளிக்க வேண்டும் என ஒரு பெருங்கூட்டமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: