• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முதன் முறையாக பிக் பாஸ் பற்றி மனம் திறந்த நமீதா மாரிமுத்து.. டைட்டில் வின்னர் யாருன்னு சொல்லிடாங்க!

முதன் முறையாக பிக் பாஸ் பற்றி மனம் திறந்த நமீதா மாரிமுத்து.. டைட்டில் வின்னர் யாருன்னு சொல்லிடாங்க!

நமீதா மாரிமுத்து பிக் பாஸ்

நமீதா மாரிமுத்து பிக் பாஸ்

மற்றொரு ரசிகர் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க, அதற்கு எங்களுக்குள் பிரச்சனை இல்லை

  • Share this:
    நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாகவே வெளியேறி விட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார்.

    தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோ இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக 5 வாரங்களை கடந்துள்ள நிலையில், தற்போது 13 போட்டியாளர்கள் கேமை விளையாடி வருகிறார்கள்.

    இவர்களில் யாரும் எதிர்பாராத வகையில் போட்டி துவங்கிய ஆறாம் நாளிலேயே திருநங்கை நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாகவே வெளியேறி விட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் வெளியேறியதாக பிக்பாஸ் அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் மலேசிய தமிழ் பெண் நாடியா சாங் , பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு மற்றும் சமீபத்தில் சுருதி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

    நாமினேஷனுக்கு முன்பாக தானாகவே போட்டியிலிருந்து நமிதா மாரிமுத்து வெளியேற அவருக்கும் தாமரைச் செல்விக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் அதனை தொடர்ந்து நடந்த சில வேண்டாத சம்பவங்களும் காரணம் என்று தகவல் வெளியானது. இதனிடையே சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இன்ஸ்டாவில் Q&A செக்ஷனை நடத்தினார் நமிதா மாரிமுத்து. அதில் தாமரை ஒரு அப்பாவியா, அவரை பற்றி உங்கள் கருத்து என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்டார். இதற்கு பதில் கூறியுள்ள நமிதா, தாமரை வெகுளியானவரா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் உண்மையில் சொன்னால் அவருக்கு பிக்பாஸ் கேமை திறம்பட விளையாடும் அளவிற்கு வலுவானவர் இல்லை. இது என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார்.

     

    மற்றொரு ரசிகர் உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்க, அதற்கு எங்களுக்குள் பிரச்சனை இல்லை. கூலாக இருக்கிறோம். என் குடும்ப நிகழ்வு ஏதேனும் ஒன்றில் அவரை பர்ஃபார்ம் செய்ய வைக்க திட்டமிட்டுள்ளேன் என்று நமிதா கூறி இருக்கிறார். மற்றொரு ரசிகர் யார் பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னராக இருப்பிர்கள் என்று எழுப்பிய கேள்விக்கு சிபி சந்திரன் அல்லது இசைவாணி இருவரில் யாராவது ஒருவர் இருக்கலாம் என கூறி இருக்கிறார். உங்களை மிஸ் செய்வதாக கூறிய ரசிகருக்கு, உங்கள் அனைவரின் அன்பையும் வென்றிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறி இருக்கிறார். வேறு ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நீங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் Wildcard-ல் போவீர்களா என்று கேட்டுள்ளதற்கு, "போகலாம் போகாமலும் இருக்கலாம், பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: