Home /News /entertainment /

அப்படி ஒரு லவ்.. திருமணத்திற்கு பிறகு கணவருடன் நட்சத்திரா இருக்கும் புகைப்படம்!

அப்படி ஒரு லவ்.. திருமணத்திற்கு பிறகு கணவருடன் நட்சத்திரா இருக்கும் புகைப்படம்!

நடிகை நட்சத்திரா

நடிகை நட்சத்திரா

நட்சத்திராவின் நெருங்கிய தோழிகளான சைத்ரா, ரேஷ்மா, ஷபானா ஆகியோரும் கல்யாணம் ஆகி லைஃபில் செட்டில் ஆகிவிட்டனர்.

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெகா ஹிட் தொடரான 'யாரடி நீ மோகினி' சீரியலில் வெண்ணிலாவாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை நட்சத்திரா. வெள்ளித்திரை டூ சின்னத்திரை என்ட்ரி்யான இவர் இப்போது புதுப்பெண். சில நாட்களுக்கு முன்பு தான் நட்சத்திரா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக பணியாற்றி வரும் விஷ்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் நட்சத்திராவுக்கு மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்துள்ளது.

    வள்ளி - கார்த்திக் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இந்நிலையில் நட்சத்திராவுக்கு சில மாதங்களுக்கு முன்பு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அப்போது தான் அவரின் நெருங்கிய தோழியான ஸ்ரீநிதி, நட்சத்திரா திருமணம் செய்து கொள்ள போகும் நபர் நல்லவர்  இல்லை எனக்கூறி பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனால் அந்த வீடியோவில் இருப்பது உண்மை இல்லை என ஸ்ரீநிதியின் அம்மாவே மீடியாவுக்கு விளக்கி இருந்தார்.

    மீண்டும் ராதிகாவுடன் சேர நினைக்கும் கோபி.. பாக்கியா எடுக்க போகும் முடிவு என்ன?

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நட்சத்திரா - விஷ்வா திருமணம் மலையாள முறைப்படி சிம்பிளாக நடந்து முடிந்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. நட்சத்திராவின் தாத்தா உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பிட்டலில் இருப்பதால் இந்த கல்யாணம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகி இருந்தது. நட்சத்திராவின் நெருங்கிய தோழிகளான சைத்ரா, ரேஷ்மா, ஷபானா ஆகியோரும் கல்யாணம் ஆகி லைஃபில் செட்டில் ஆகிவிட்டனர்.

    nakshatra husband serial actress nakshatra instagram photo with his husband vishwa valli thirumanam nadigai nakshatra
    கணவருடன் நட்சத்திரா


    இப்போது நட்சத்திராவும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பயங்கர லவ்வுடன் நட்சத்திரா தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து இருக்கின்றனர். இது ஒரு காதல் திருமணம் என்பது அனைவருக்கும் தெரியும் இந்நிலையில் அதே லவ்வுடன் ரொமாண்டிக் பாடலுடன் இந்த புகைப்படத்தை நட்சத்திரா இன்ஸ்டாவில்  ஷேர் செய்து இருக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Television, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி