பிக் பாஸ் 5-ல் தான் கலந்துக் கொள்வதாக வெளிவந்த செய்திக்கு நடிகர் நகுல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-ம் சீசன் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கடந்த 4 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்தி வழங்கினார். ஆனால் இந்த முறை சட்டமன்ற தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தொகுப்பாளர் மாறக்கூடும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சிம்பு பெயரும் அடிப்படுகிறது.
பிக் பாஸ் 5-ல் கலந்துக் கொள்பவர்களின் பட்டியலும் இணையத்தில் வெளியாகின. இதில் நடிகர் நகுலின் பெயரும் அடிப்பட்டது. இந்நிலையில் அவர் இந்த விஷயத்திற்கு மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இணையத்தில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ”பிக் பாஸ் தமிழ் சீசன் 5-க்கு இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் இந்த தங்கத்த (அவரது மகள் அகிரா) விட்டுட்டு போக முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். தவிர, மகளுடன் நேரத்தை செலவிடும் ஒவ்வொரு தருணத்தை தவறாமல் பகிர்ந்துக் கொள்கிறார் நகுல்.