• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சமந்தா எங்களுக்கு எப்போதும் நெருக்கமானவராக இருப்பார் - நாகார்ஜுனா!

சமந்தா எங்களுக்கு எப்போதும் நெருக்கமானவராக இருப்பார் - நாகார்ஜுனா!

சமந்தா - நாகார்ஜுனா

சமந்தா - நாகார்ஜுனா

  • Share this:
    சமந்தா - நாக சைத்தன்யா பிரிவு குறித்து நடிகர் நாகார்ஜுனா ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    கடந்த ஒரு மாதகாலமாக இணையத்தில் வலம் வந்த வதந்திகளுக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தனர் நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைத்தன்யாவும். படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த இவர்கள், கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே சமந்தா ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சமந்தா - நாக சைத்தன்யா இருவரும்.

    தாங்கள் இருவரும் பிரிவதாக அவர்கள் அறிவித்தது, ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் நாக சைத்தன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜுனா நாக சைத்தன்யா - சமந்தா இருவரின் பிரிவு குறித்து ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், “சமந்தாவுக்கும், சைதன்யாவுக்கு இடையே நடந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நான் இதை மிகுந்த பாரமான மனத்துடன் தெரிவிக்கிறேன். ஒரு கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் முற்றிலும் தனிப்பட்டவை.



    சமந்தாவும், சைதன்யாவும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். சமந்தா இந்த வீட்டில் இருந்த நாட்களை, அவர் எங்களுடன் செலவழித்த நேரங்களை நாங்கள் எப்போதும் அன்புடன் நினைவுகூர்வோம். சமந்தா எப்போதும் எங்களுக்கு நெருக்கமானவராகத் தான் இருப்பார். இருவருக்கும் இறைவன் மன வலிமையைத் தரட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: