• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸில் கலந்து கொண்டதால் ஏகப்பட்ட நஷ்டம் - நாடியா குடும்பத்தினர் மனவருத்தம்!

பிக்பாஸில் கலந்து கொண்டதால் ஏகப்பட்ட நஷ்டம் - நாடியா குடும்பத்தினர் மனவருத்தம்!

நாடியா சங்

நாடியா சங்

Bigg Boss Tamil 5: பிக் பாஸ் சீசன் 5ல் கிடைக்கும் பணத்தை விட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாங்கள் செலவழித்த பணம் மிகவும் அதிகம் என்று அவரின் குடும்பத்தினர் நொந்துபோய் கூறியிருக்கிறார்கள்.

  • Share this:
சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கி, தற்போது மூன்றாவது வாரமாக நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எப்போதும் முதல் வாரம் எந்த போட்டியாருமே வெளியேற்றப்பட மாட்டார்கள். இரண்டாவது வாரத்தில் தான் முதல் எலிமினேஷன் நடக்கும்.

போட்டியில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது எப்போதுமே ஆர்வமாக இருக்கும். இதற்கான முக்கிய காரணம் வெளியேறிய போட்டியாளர் மீடியாக்களுக்கு அளிக்கும் பேட்டி. சக போட்டியாளர்களை பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை முதன்முதலாக வெளியேற போட்டியாளர் ரசிகர்களுக்கு தெரிவிப்பார். ஆனால் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 5 முதலில் வெளியேறிய போட்டியாளரின் குடும்பம் மிகவும் மனவருத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளரான மலேசிய தமிழர் முகேன் போலவே, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தினார் தற்போதைய சீசனில் கலந்து கொண்ட டிக்டாக் புகழ் நாடியா. லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட முகேனின் வழித்தடங்களை பின்பற்றி நாடியாவும் கடினமான, சவாலான போட்டியாளராக மிளிர்வார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், முதல் போட்டியாளராக இவர் வெளியேறியது மிகவும் அதிர்ச்சியாகவே உள்ளது.

தங்களின் கடந்த காலத்தை பற்றி கூறும் டாஸ்க்கில், மிகவும் போராட்டமான கடந்த கால வாழ்க்கையை பற்றி மற்றும் தன்னுடைய காதல் கணவன் மற்றும் குழந்தைகளை பற்றியும் கூறினார். குறிப்பிட்ட இந்த டாஸ்க் தவிர்த்து நிகழ்ச்சியில் நாடியா இருக்கிறாரா இல்லையா என்று சந்தேகிக்கும் அளவுக்கு இவர் கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டார். மலேசியாவில் இருந்து வந்திருப்பதால் முதல் வாரத்தில் இவர் நிச்சயமாக வெளியேற மாட்டார் என்று பலரும் கணித்திருந்த நேரத்தில், அதிர்ச்சியூட்டும் வகையில் முதலில் வெளியேறினார் நாடியா சாங்.

நாடியா சாங் இவ்வளவு சீக்கிரமாக நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனது பற்றி அவரது குடும்பத்தினர் மிகவும் வருத்தம் தெரிவித்தனர். அது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிறைய பணத்தை செலவழித்ததாகவும் கூறியுள்ளனர்.

Also read... Bigg Boss Promo: அபிஷேக்கின் கேவலமான கேம் பிளான் - கடுப்பான பிரியங்கா, வருண்!

பிக் பாஸ் சீசன் 5ல் கிடைக்கும் பணத்தை விட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாங்கள் செலவழித்த பணம் மிகவும் அதிகம் என்று அவரின் குடும்பத்தினர் நொந்துபோய் கூறியிருக்கிறார்கள்.

நாடியா சாங் நிகழ்ச்சியில் தன்னுடைய பங்களிப்பை சரியாக செய்யாததால் வெளியேறினார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். டாஸ்க்குகள் எதுவுமின்றி, இரண்டு வாரங்களுமே, போட்டியாளர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி மட்டுமே பகிர்ந்து கொண்டார்கள். அதனால், நாடியா சாங்கிற்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் சிலர் தெரிவித்து வந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: