சன் டிவி, விஜய் டிவி சீரியல் நடிகையான ஸ்ருதி சண்முகம், திருமணத்திற்கு முன்பு தனது நண்பர்களுடன் சேர்ந்து பேச்சிலர் பார்ட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நாதஸ்வரம்' தொடரின் மூலம் சின்னத்திரை நடிகையாக ஸ்ருதி சண்முக பிரியா அறிமுகமானார். தொடர்ந்து 'வாணி ராணி', 'கல்யாண பரிசு', 'பொன்னூஞ்சல்', 'பாரதி கண்ணம்மா' ஆகிய தொடர்களில் நடித்து வந்தார். எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் காலேஜில் இருந்து நேராக நடிக்க வந்தவர் தனது அழகு மற்றும் நடிப்பு திறமையால் ஜொலிக்க தொடங்கினார். நாதஸ்வரம் சீரியலில் இவர் நடித்த ராகினி ரோல், வாணி ராணி சீரியலில் பவித்ரா ரோல் இன்று வரை மக்களால் பேசப்படுகிறது. அதேபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான கொடி திரைப்படத்தில் கூட நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?
கடைசியாக பாரதி கண்ணம்மா சிரீயலில் பாரதியின் அக்காவாக, சவுந்தர்யாவின் மூத்த மகள் ரோலில் நடித்தார். அதன் பின்பு சின்னத்திரையை விட்டு விலகினார். பிரஞ்ச் மொழியை முதன்மையாக தேர்வு செய்து அதில் பி1 படித்தார். இவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ். அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் டச்சில் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்ருதி, தனக்கு திருமணம் என்று பதிவு செய்து, அவரின் வருங்கால கணவரின் புகைப்படத்தையும் ஷேர் செய்து இருந்தார்.
ஸ்ருதிக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது. பாடி பில்டரான அரவிந்த் சேகர் அண்மையில் நடைபெற்ற ஜேபி கிங்க்ஸ் க்ளாசிக் 2022 போட்டியில் சில்வர் பட்டம் வென்றுள்ளார். இந்த ஜோடிக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைப்பெறவுள்ளது.
அதற்கு முன்பு தங்களது நண்பர்களுடன் பேச்சிலர் பார்டி வைத்து கொண்டாடி இருக்கின்றனர். இந்த பார்டிக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் சென்று இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா, ரோஜா சீரியல் பிரியங்கா, நாதஸ்வரம் சீரியல் நடிகை, சன் டிவி பிரபலங்கள், விஜய் டிவி பிரபலங்கள் என ஒட்டுமொத்த சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு ஜோடிகளை வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்களை ஸ்ருதி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.