• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் மனைவியை விட்டு கொடுக்காத மாயன்... வைரல் போஸ்ட்!

சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் மனைவியை விட்டு கொடுக்காத மாயன்... வைரல் போஸ்ட்!

நாம் இருவர் நமக்கு இருவர் மாயன்

நாம் இருவர் நமக்கு இருவர் மாயன்

”இந்த ஆடையை வாங்கியவர் என்னுடைய மனைவி ஸ்ரீஜா .இந்த ஆடை எப்படி இருக்கு அப்படின்னு சொல்லுங்க.”

  • Share this:
    சின்னத்திரை நடிகர் செந்தில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

    அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன பண்பலை தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய நடிகர் செந்தில், சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சரவணனாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி, தற்போது மாயனாக சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற குடும்பப்பாங்கான சீரியலில் மாயன் என்ற பாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார், செந்தில்.

    விஜய் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர், கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, சீரியல்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட போது, அதே பெயரில் ஆனால் புதிய கதை களத்தில் மீண்டும் ஒளிபரப்பாக தொடங்கியது.

    புதிய கதை களத்திலும் மாயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் செந்திலுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. மாயன் என்ற பாத்திரத்தில் கெத்தாகவும், மாஸாகவும், கொஞ்சம் காமெடியாகவும் அதே நேரத்தில் குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்து வரும் செந்திலுக்கு இந்த பாத்திரத்திற்கென்றே தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது.

    மிர்ச்சி செந்தில் என்று பரவலாக அறியப்பட்ட நடிகர் செந்தில், தற்போது மாயன் பாத்திரத்தில் அனைவர் மனதையும் கொள்ளை அடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் செந்திலின் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மற்றும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டகிராம் பேஜியும், யூடியூப் சேனலிலும் பகிர்ந்துள்ளார்.

    இது என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை ரோலுக்கு வந்த சோதனை! மீண்டும் மாற்றமா?

    செந்தில் , சரவணன் மீனாட்சி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிழல் ஜோடி சரவணன் மீனாட்சி, நிஜ ஜோடி செந்தில் ஸ்ரீஜாவாக ஆனது.



     




    Instagram இல் இந்த இடுகையைக் காண்க





     

    Mirchi Senthil இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mirchisenthil983)






    மேலும் அந்த போஸ்டில், "என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இதுதான் என்னுடைய பிறந்த நாள் டிரஸ். இந்த ஆடையை வாங்கியவர் என்னுடைய மனைவி ஸ்ரீஜா இந்த ஆடை எப்படி இருக்கு அப்படின்னு சொல்லுங்க. என்னுடைய பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அதைப் பாருங்கள்" என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் கேப்ஷனில் பகிர்ந்துள்ளார்.‌

    ஆரஞ்சு நிற குர்தா மற்றும் ஆரஞ்சு சரிகை போட்ட வேட்டியில் மிகவும் ஸ்மார்ட்டாக இருக்கிறார் நடிகர் செந்தில். ரசிகர்கள் மட்டுமின்றி சின்னத்திரை வட்டாரத்தில் உள்ள அனைவரும் நடிகர் செந்திலுக்கு தொடர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: