சீரியலில் நல்ல தங்கை.. ஆனால் நிஜத்தில் அம்மாவுக்காக ’நாம் இருவர் நமக்கு இருவர்’ ஐஸ்வர்யா செய்த காரியம்!

நாம் இருவர் நமக்கு இருவர் ஐஸ்வர்யா

அடி வாங்கி அழும் சீன்களில் வைஷ்ணவியை பார்த்து கவலைப்படாத இல்லத்தரசிகளே இல்லை எனலாம்.

 • Share this:
  நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கடைக்குட்டி தங்கையாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா நிஜத்தில் அவரின் அம்மாவுக்காக செய்த செயல் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

  விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் கடைக்குட்டி தங்கையாக நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. இவரின் நிஜப்பெயர் வைஷ்ணவி அருள்மொழி. இவரின் அருள் மொழி என்ற பெயருக்கு ஒருகுட்டி ஸ்டோரி இருக்கிறது.

  தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர் கோயம்புத்தூரில் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிப்பை முடித்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த வைஷ்ணவியின் அம்மா ஒரு டீச்சர். வீட்டில் கண்டிப்பாக படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க சொன்ன நேரத்தில் தான் அவர் யூடியூப் ஷார்ட் ஃபிலிம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். ஏராளமான கான்செப்ட் வீடியோஸில் நடித்தார். இவர் அதிகமாக நடித்த கதாபாத்திரம் தங்கையாக தான். பாசமலர் தங்கையாக நடிப்பதில் வைஷ்ணவி கெட்டிக்காரர். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக இவரின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. முத்துராசை திருமணம் செய்து கொண்டு அவரிடம் அடி வாங்கி அழும் சீன்களில் வைஷ்ணவியை பார்த்து கவலைப்படாத இல்லத்தரசிகளே இல்லை எனலாம்.

  அன்று நீயா நானாவில் தோன்றிய முகம்... இன்றே அதே விஜய் டிவி சீரியலில் வில்லியாக அர்ச்சனா!

  சின்னத்திரையில் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மலர் சீரியல் தான். அதிலும் ஹீரோயின் தங்கை கேரக்டர்தான். பின்னர் சன்டிவியின் அழகு சீரியலில் நிவி என்ற ரோலில் நடித்தார். வைஷ்ணவிக்கு அம்மா என்றால் உயிர். அதனால் தான் வைஷ்ணவி என்ற பெயருக்கு பின்னால் அருள்மொழி என அவரது அம்மா பெயரை சேர்த்துள்ளார்.

  புடவையில் வைஷ்ணவி


  பெரும்பாலும் பெண்கள் அப்பா பெயரைத் தான் பின்னால் சேர்த்துக் கொள்வார்கள் ஆனால் இவர், தனது அம்மா பெயரை சேர்த்து அதை பெருமையுடன் எல்லா இடங்களிலும் பதிவு செய்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: