நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் கடைசி நேரத்தில் ஒருவழியா மாயனை அண்ணனாக ஏற்றுக் கொண்டார் சரண்யா. இதுவரை நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் மாயன் காரணம் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.
விஜய் டிவியில் மெகா சூப்பர் ஹிட் சீரியலான நாம் இருவர் நமக்கு இருவர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. இதனால் திரைக்கதை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இறுதிக்கட்டம் என்பதால் கெட்டவர்கள் எல்லா திருந்தி தனது சொந்தங்களுடன் சேர்வது போல் கதை பயணித்துக் கொண்ருக்கிறது. தாமரையை மாறன் ஏற்றுக் கொண்டார். அதே போல தான் , பாண்டி மீது செம்ம கோபத்தில் இருந்த சரண்யாவும் இப்போது மாறிவிட்டார். மகாவுக்கு குழந்தை பிறக்க போகிறது. திரைக்கதை இப்படி மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது தான் முத்துராசும் அவரின் மாமா மாசாணியும் என்ட்ரி கொடுத்தனர்.
6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?
மாயனை பழிவாங்க, மகாவை கொலை செய்ய வேண்டும் என துடிக்கின்றனர். இதற்காக பிளான் போடுகின்றனர். ஆஸ்பிட்டலுக்கு போகும் வழியில் மாயன் காரை மடக்கி மகாவை கொலை செய்ய வருகின்றனர். அதற்குள் மாயன் ரவுடிகளிடம் சண்டை போட்டு மகாவை காப்பாற்றிவிடுகிறார். ஆனால் அதற்குள் மகாவுக்கு பிரசவலி வந்து விட்டது அதுமட்டுமில்ல மாயனை அடிக்க வந்த ரவுடிகள் நாச்சியாரை தலையில் அடித்து விடுகின்றனர். இதனால் ரத்த வெள்ளத்தில் இப்போது நாச்சியாரும் ஆஸ்பிட்டலில் இருக்கிறார்.
இவர்களை நினைத்து கதறி அழுகிறார் மாயன். ஆறுதலாக ஐஸ்வர்யாவும் காயத்ரியும் துணையாக நிற்கின்றனர். முத்துராசை கார்த்திக் கைது செய்து சிறையில் அடைத்து விடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.அதில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு நாளாக மாயனை வெறுத்துக் கொண்டிருந்த சரண்யா இன்றைய எபிசோடில் மாயனை அண்ணனாக எற்றுக் கொள்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர்! அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?
அதுமட்டுமில்லை ஆறுதல் கூறி ”நல்லவனுக்கு நல்லது தான் நடக்கும், அம்மா, அண்ணிக்கு எதுவும் ஆகாது” என்கிறார். சரண்யாவின் இந்த பேச்சை கேட்டு அதிர்ச்சியில் நிற்கிறார் மாயன். ஐஸ்வர்யாவும் காயத்ரியும் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைகிறார்கள். அதிர்ச்சி அவர்களுக்கு மட்டுமில்லை புரமோவை பார்த்த ரசிகர்களுக்கும் தான். இவ்வளவு சீக்கிரமாக சரண்யா திருந்தி விட்டாரா? என்பது தான் ரசிகர்களின் ரியாக்ஷன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.