• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தாய்மை ரொம்ப ஸ்பெஷல்.. கர்ப்பமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலம்!

தாய்மை ரொம்ப ஸ்பெஷல்.. கர்ப்பமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலம்!

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

இந்த சீரியலில் கதையின் திருப்பமே இவரால் தான் ஏற்படும்.

  • Share this:
    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் பிரபலமான வனிதா ஹரிஹரன் கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தையின் வருகைக்காக காத்திருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

    சரவணன் மீனாட்சி ஹிட் சீரியலுக்கு பின்பு மிர்ச்சி சரவணனுக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி கொடுத்த சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் ரசிகர்களின் பேராதரவை பெற்ற சீரியல் ஆகும். அதற்கு காரணம் சீரியலின் கதைக்களம்.விஜய் டிவியில் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சக்கை போடு போட்ட சீரியலில் இதுவும் ஒன்று. நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 பீக்கில் இருக்கும் போதே கொரோனாவால் விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சீரியலின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  லாக்டவுனுக்கு பிறகு சீசன் 2 தொடங்கப்பட்டது. இதில் இரண்டு ஹீரோயின்களாக நடித்த ரக்சா, ரேஷ்மி என இருவருமே மாற்றப்பட்டிருந்தனர்.

    ஹீரோ மாயன் கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த செந்தில் மட்டும் தொடர்ந்தார். முதல் சீசனில் மாயனின் தங்கை ஆனந்தியாக நடித்தவர் சின்னத்திரை நடிகை வனிதா. இந்த சீரியலில் கதையின் திருப்பமே இவரால் தான் ஏற்படும். மாயனை பழிவாங்க , தேவியின் தம்பி ஆனந்தியை திருமணம் செய்து கொள்வார். இந்நிலையில் இந்த சீரியலுக்கு பின்பு வேறு எந்த சீரியலிலும் ஆனந்தியை பார்க்க முடியவில்லை.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Vanitha Hariharan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vanithahariharan)






    இவர் ஏற்கெனவே சின்னத்திரையில் தெய்வமகள், பகல் நிலவு, ரோஜா போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் நடிப்பத்தை தவிர்த்து வந்த இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். குழந்தையின் வருகைக்காக காத்திருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார், இவருக்கு சின்னத்திரை திரை பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லை இவருடன் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கார்த்திக்காக நடித்த சசிந்தருக்கும் அண்மையில் தான் ஆண் குழந்தை பிறந்தது . இந்நிலையில் அடுத்து வனிதா ஹரிஹரன் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: