• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • வெள்ளித்திரையில் அறிமுகமாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!

வெள்ளித்திரையில் அறிமுகமாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

சபாபதி திரைப்படத்தில் நடிகர் சந்தானம், நடிகை ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர்.

  • Share this:
    தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. வயது மூத்த வெள்ளித்திரை நடிகர்கள் சினிமா வாய்ப்பு சரிவர கிடைக்காததால் அங்கிருந்து சின்னத்திரைக்கு தாவி கொண்டிருக்க, சின்னத்திரையில் சீரியல்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து வரும் பல நடிகர்கள் வெள்ளித்திரைக்கு செல்கின்றனர். தெய்வமகள் சீரியலில் சத்யா கேரக்டரில் நடித்த வாணி போஜன், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இதற்கு எடுத்துகாட்டாக இருந்து வருகின்றனர்.

    இவர்களை தவிர முன்னணி நடிகர்களான நடிகர் சந்தானம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் சின்னத்திரையில் இருந்து சென்று சினிமா துறையில் சாதித்து காட்டி இருக்கிறார்கள். அதிலும் பிரபல டிவி சேனலாக தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து உள்ள ஸ்டார் விஜய் டிவி-யில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று சினிமா துறையில் ஜொலிக்கும் கலைஞர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    அந்த வகையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் நடிகை ஒருவர் வெள்ளித்திரையில் இன்று அறிமுகம் ஆகி இருக்கிறார். நாம் இருவர் நமக்கு இருவர் என்ற விஜய் டிவி சீரியலில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. இந்த சீரியலில் ஹீரோவின் தங்கை கேரக்டரில் இவர் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்னர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மலர் என்ற சீரியலில் நடித்தார். சன் டிவி-யில் ஒளிபரப்பான அழகு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

    இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் லீட் ரோலில் நடித்திருந்தார். மதுரையை சேர்ந்த இவர் 2020-ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் & மிஸஸ் காதல் என்ற காதல் அடிப்படையிலான குறும்படத்திலும் நடித்து இருக்கிறார். நடிகர் சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் சபாபதி திரைப்படத்தில் நடிகை வைஷ்ணவி அருள்மொழி நடித்து இருக்கிறார். இந்த முழு நீள நகைச்சுவை படத்தில் நடிகர் சந்தானத்திற்கு தங்கையாக நடித்து இருக்கிறார் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.



     




    View this post on Instagram





     

    A post shared by Vaishnavi Arulmozhi (@laya.vaish)






    சபாபதி திரைப்படத்தில் நடிகர் சந்தானம், நடிகை ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே மற்றும் விஜய் டிவி பிரபலம் புகழ் ஆகியோர் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னணி நடிகர்கள் நடிபில் வெளியாகி இருக்கும் சபாபதி திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருக்கும் நடிகை வைஷ்ணவி அருள்மொழிக்கு சோஷியல் மீடியாவில் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு உள்ளனர். தங்கை ரோலில் சினிமாவில் அறிமுகமாகி இருக்கும் நடிகை வைஷ்ணவி அருள்மொழி விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயின் ரோலில் நடிக்க வேண்டும் என்று அவரது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் இன்ஸ்டாவில் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: