விஜய் டிவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் புகழ் ராஷ்மிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவரே தனது இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
கன்னட சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ராஷ்மி ஜெயராஜ் தமிழ் சின்னத்திரையில் ‘விதி’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். முதல் சீரியல் அவருக்கு பெரிதும் கைக்கொடுக்கவில்லை ஆனால் விஜய் டிவியில் ‘நாம் இருவர் நம்க்கு இருவர்’ தொடர் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழை சம்பாதித்து தந்தது. அந்த சீரியலில் அவரின் தாமரை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியல் 579 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிப்பரப்பட்ட நிலையில், கொரோனா சூழல், லாக்டவுன் காரணங்களால் சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் கதையை மாற்றி சீசன் 2 ஆக புது தொடராக ஒளிப்பரப்பட்டது. ஆனால் அதில் ராஷ்மி நடிக்கவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர்? சந்தேகத்தை எழுப்பும் வீடியோ!
அவருக்கு பதில் சரவணன் மீனாட்சி புகழ் ரட்சித்தா லீட் ரோலில் நடித்தார். அவரும் இடையில் சீரியலில் இருந்து வெளியேற அரண்மன கிளி ஜானு மகாவாக நடித்தார். 2 வாரங்களுக்கு முன்பு தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன் 2 இனிதே நிறைவடைந்தது. முதல் பாகத்தில் நடித்த ராஷ்மி ரிச்சு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வரமாட்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், விஜய் டிவியில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.`ராஜ பார்வை’ என்னும் விஜய் டிவியின் புது சீரியலில் கமிட் ஆனார் ராஷ்மி. கடந்த மார்ச் மாதம் ஒளிபரப்பாக தொடங்கிய `ராஜபார்வை’ தொடர் ராஷ்மிக்கு மீண்டும் நல்ல கம்பேக்காக அமைந்தது. ஆனால் திடீரென்று சீரியல் முடிக்கப்பட்டது.
7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!
அதன் பின்பு ராஷ்மி எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மீண்டும் சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தியவர் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் ஷேர் செய்தார். அதனைத்தொடர்ந்து ராஷ்மிக்கு பிரம்மாண்டமாக வளைக்காப்பு நடந்தது. அதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராஷ்மி தனது இன்ஸ்டாவில், தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த சந்தோஷமான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட அவர், தந்தையர் தின வாழ்த்துக்களை தனது கணவருக்கு பகிர்ந்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.