நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகேந்திரனின் உண்மையான முகம், சரண்யாவுக்கு தெரிந்து விட்டது. இதன் பின்பு சரண்யா எடுக்க போகும் அதிரடியான முடிவு என்ன? என்பதை தெரிந்து கொள்ள தான் ரசிகர்கள் வெயிட்டிங்.
நாம் இருவர் இருவர் நமக்கு இருவர் முதல் பாகம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து 2வது பாகம் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. கிட்டத்தட்டே ஒரே திரைக்கதையில் தான் பயணிக்கிறது. ஆனால் சின்ன மாற்றமாக இதில் 3 தங்கைகள். அதே போல் மாயன் நல்லவர் போலவும், மாறன் கெட்டவர் போலவும் கதாபாத்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போது கதைப்படி மாயன்,பிளான் செய்து தாமரைக்கும் மாறனுக்கும் கல்யாணம் செய்து வைத்துவிட்டார். அதுமட்டுமில்லை, மாயன் சொல்லிக் கொடுத்து தான் தாமரை இப்படி செய்தார் என்ற உண்மையும் மாறனுக்கு தெரியாது.
பிக் பாஸ் 5 பிரபலத்தை பாடாய்படுத்தும் விவாகரத்து சர்ச்சை!
ஆனால் தன்னுடைய கல்யாணத்தில் ஏதோ ஒரு குழப்பம் இருப்பதை உணர்ந்த மாறன், நேற்று தாமரையை அழைத்துக் கொண்டு நாச்சியார் வீட்டுக்கு விருதுக்கு சென்றார். எதாவது உன்மையை தெரிந்து கொள்ளலாம் என எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் அது நடக்கவில்லை. இது ஒருபுறம் இருக்க, சரண்யாவுக்கு மகேந்திரன் பற்றிய எல்லா உண்மைகளும் கிட்டத்தட்ட தெரிந்து விட்டது. இந்த காதல் சரியாக வராது என நினைத்தவர் இதுப்பற்றி அம்மாவிடம் அண்ணி மகாவிடமும் பேசுகிறார்.
ஆனால் இருவரும் சரண்யாவுக்கு தான் அட்வைஸ் செய்கின்றனர். அதற்குள் சரண்யா, மகேந்திரனுக்கு ஃபோன் செய்து வேலையை ராஜினமா செய்வதாக கூறுகிறார். அதுமட்டுமில்லை இனிமேல் காதல் எல்லாம் வேண்டாம் பிரேக் அப் என்றும் சொல்லிவிடுகிறார். இதை சரண்யாவின் அத்தை மகனும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
COOK WITH COMALI : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்.. வரப்போவது இவர்கள் தான்!
சரண்யா இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்காத மகேந்திரன், அதிர்ச்சியில் நிற்கிறார். மகேந்திரன் எவ்வளவு சொல்லியும் சரண்யா கேட்பதாக இல்லை. அதே போல் மாறன், நாச்சியார் வீட்டுக்கு விருந்துக்கு வந்ததும் அவரின் அம்மா சாரதாவுக்கு தெரிந்து விட்டது. இதனால் அவரும் மாறன் மீது கோபம் கொள்கிறார். ஆனால் என்ன காரணத்திற்காக மாறன், அவர்களின் வீட்டுக்கு சென்றாரோ அந்த உண்மையை அம்மாவிடம் சொல்லி விடுகிறார். அதுமட்டுமில்லை தாமரையை ஏற்றுக் கொண்டது போல் நடிக்கும் மாறன், இரவு நேரத்தில் தாமரையை ரூமை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இன்றைய எபிசோடில் இடம்பெறும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.