17 வயதில் எண்ட்ரி...லவ் பிரேக்கப்.. துவண்டு போகாமல் சிக்சர் அடித்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சரண்யா!

நாம் இருவர் நமக்கு இருவர் சரண்யா

இந்த தகவலை நேரலையில் பகிர்ந்து ஜனனி தேம்பி தேம்பி அழுத வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது

 • Share this:
  விஜய் டிவியில் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சரண்யா, தனது கெரியரில் சிக்சர் அடித்த ஸ்டோரி.

  வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை நடிகைகள் பலர் திகழ்கிறார்கள். குறுகிய காலத்திலேயே சின்னத்திரை நடிகைகள் பலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவர்வது தான். அந்த வகையில் விஜய் டிவியில் நடிக்கும் சீரியல் நடிகைகள் பலரும் தங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கின்றனர். அந்த லிஸ்டில் நடிகை ஜனனி அசோக் குமாரும் ஒருவர். இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சரண்யாவாக நடிக்கிறார்.

  இதற்குமுன்பு மாப்பிள்ளை, மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கோயம்புத்தூரை பூர்விகமாகக் கொண்ட ஜனனி தனது 17 வயதில் லோக்கல் சேனல்களில் ஆங்கராக பயணத்தைத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்தார்.

  ஜனனி பிரைடல் ஷூட்


  நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ’நண்பேன்டா’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். ஒருசில குறும்படங்களிலும் இவரை பார்க்கலாம். அதன் பின்பு தான் ஜனனிக்கு மாப்பிள்ளை சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ஜீ தமிழில் ஓளிப்பரப்பாகும் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் செம்பருத்தியில் ஐஸ்வர்யா ரோலில் நடித்தார். முதலில் ஆதியை திருமணம் செய்து கொள்ள எண்ணி பின்பு அருணைத் திருமணம் செய்துக் கொண்டு அகிலாண்டேஸ்வரி மருமகள் ஆவார். ஐஸ்வர்யா ரோல் நன்றாக சென்றுக்கொண்டிருக்க திடீரென்று அதில் இருந்து நீக்கப்பட்டார். இந்த தகவலை நேரலையில் பகிர்ந்து ஜனனி தேம்பி தேம்பி அழுத வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. அதுமட்டுமில்லை ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறியிருந்தனர். வீடியோவில் எல்லாமே பாசிடிவ் கமெண்ட்ஸ்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதற்கு அடுத்தப்படியாக காதல் தோல்வி, இதுக் குறித்தும் தனது ரசிகர்களிடம் ஒருமுறை பகிர்ந்துகொண்டார். குடிப்பழக்கத்தால் 5 வருட காதல் பயணம் முடிவுக்கு வந்தது. ஜனனி எத்தனையோ முறை சொல்லியும் அவரின் பாய் ஃபிரண்ட் கேட்கவில்லையாம். இதனால் அவரை பிரிந்தார் ஜனனி. இப்போது சிங்கிளாக சந்தோஷமாக வாழ்க்கையை எஞ்சாய் செய்து கொண்டிருக்கிறார்.

  also read அழகான சிரிப்புக்கு சொந்தக்காரியான ஜெனிஃபர் சின்னத்திரைக்கு வந்த கதை!

  நடிப்பைத் தவிர மேக்கப் போட்டு வித விதமான படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவது, மேக்கப் மற்றும் பியூட்டி டிப்ஸ்களை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துக் கொள்வதென ஜனனி இப்போ பிஸியோ பிஸி.
  Published by:Sreeja Sreeja
  First published: