விஜய் டிவி-யில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை தற்போது மின்னல் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே வெளியான புரமோவின் படி, சரண்யாவுக்கு பாண்டியுடன் திருமணம் நடக்கவிருப்பது தெரிந்து விட்டது. இப்போது அந்த கல்யாணத்தை சரண்யா ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா? என்பது தான் அடுத்த திருப்பம்.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் முதல் பாகம் நிறுத்தப்பட்டு இரண்டாம் பாகம் 400 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பபாகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இதிலும் மிர்ச்சி செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரச்சிதா மகாலட்சுமி நடித்து வந்தார். பின்னர் அவர் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மோனிஷா நடித்து வருகிறார்.தற்போது மாயனின் தங்கை சரண்யாவின் திருமண எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது. சரண்யாவின் காதலன் அவரை ஏமாற்ற ஒரு கல்யாண நாடகத்தை நடத்துகிறான்.
இதையும் படிங்க.. முடிய போகும் சன் டிவி சூப்பர் ஹிட் சீரியல்? இணையத்தில் பரவும் தகவல்!
இந்த உண்மையை மாயன் கண்டுப்பிடிக்க, பாண்டியிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொல்கிறார். பாண்டி உணர்ச்சிவசப்பட்டு சரண்யாவுக்கு தாலி கட்டி கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். ஆனால் இந்த அதிரடி திருப்பதை சரண்யா எதிர்பார்க்கவில்லை. கத்தி அழுகிறார், அந்த நேரம் பார்த்து மாயன் கல்யாணம் நடக்கும் கோவிலுக்கு வந்து சரண்யாவிடம் எல்லா உண்மைகளையும் சொல்கிறார். ஆதாரமாக பேப்பரில் வந்த திருமண மோசடி செய்தியையும் காட்டுகிறார்.
சரியாக போலீஸ் வந்து, சரண்யாவின் காதலனை கைது செய்கிறது. இவை அனைத்தும் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும். இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் சரண்யா பாண்டியை ஏற்றுக் கொள்வாரா? மாட்டாரா? என்ற ட்ராக் தான் ஒளிப்பரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. படித்த பெண்ணான சரண்யா, பாண்டியை ஏற்றுக் கொள்ளாமல் வீட்டில் மிகப் பெரிய ரகளை செய்கிறார். வெறுப்பின் உச்சத்தில் எனக்கு ஏன் இப்படி நடக்குது? என தனது அம்மா நாச்சியாரிடம் கதறி அழுகிறார். மொத்த குடும்பமும் அவரை சமாதானம் செய்கின்றனர்.
இதையும் படிங்க.. அந்த விஷயம் தான் காரணமா? முடிவுக்கு வரும் பிரபல சீரியல்!
கோபத்தில் இது எல்லாத்துக்கும் மாயன் தான் காரணம் என சண்டைக்கு போகிறார். ஆனால் மற்ற தங்கைகள் மாயன் தான் சரண்யாவை காப்பாற்றியதாக பெருமையாக பேசுகின்றனர். இவை அனைத்தும் அடுத்த வாரத்தில் டெலிகாஸ்ட் செய்யப்படும் என தெரிகிறது. அதுமட்டுமில்லை கதை மின்னல் வேகத்தில் செல்வதால் கூடிய விரைவில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் முடியவுள்ளதாகவும் ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படாத தகவல் தான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.