Home /News /entertainment /

இதுக்கு பேரு கல்யாணமா? உச்சக்கட்ட கோபத்தில் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சரண்யா!

இதுக்கு பேரு கல்யாணமா? உச்சக்கட்ட கோபத்தில் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சரண்யா!

நாம் இருவர் நமக்கு இருவர் சரண்யா

நாம் இருவர் நமக்கு இருவர் சரண்யா

நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் சரண்யா பாண்டியை ஏற்றுக் கொண்டால் தான் கதை ஒருமுடிவுக்கு வரும்

    நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் பாண்டியுடன் நடந்த திருமணத்திற்கு பிறகு உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார் சரண்யா. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் பாண்டியை விரட்டி அடிக்கிறார்.

    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 2 திரைக்கதை தற்போது மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. சரண்யாவுக்கு பாண்டியுடன் தான் திருமணம் நடக்கும் என ரசிகர்கள் கணித்து இருந்தனர். அதே போல் கடைசி நேரத்தில் பாண்டி, சரண்யா கழுத்தில் தாலி கட்டிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத சரண்யா மொத்த கோபத்தையும் மாயன் மீது காட்டுகிறார். ஆனால் மாயனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமு இல்லை. மாயன், பாண்டியிடம் கல்யாணத்தை நிறுத்து என்று தான் கூறுவார், ஆனால் பாண்டி தான் சரண்யா மீது இருக்கும் ஆசையில் தாலி கட்டிவிட்டார்.

    அந்த வார்த்தை சொன்ன தாமரை.. கடுப்பானாரா ஆங்கர் பிரியங்கா? கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!

    இந்த பிரச்சனைக்கு பிறகு சரண்யா, வீட்டில் இருக்கும் யாருடனும் பேசவில்லை. நாச்சியார் எவ்வளவு சமாதானம் செய்தும் சரண்யா கேட்பதாக இல்லை. அழுதுக் கொண்டு ரூமில் முடங்கி இருந்ந்தார். சமாதானம் செய்ய போன பாண்டியையும் வெளியே துரத்தினார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடில் சரண்யா வழக்கம் போல் சாப்பிட ஹாலுக்கு வருகிறார். அவருக்கு பாண்டி டிபன் எடுத்து சென்று கொடுக்கிறார்.

    இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சரண்யா,சாப்பாட்டை தூக்கி அடிக்கிறார். பாண்டியை அடித்து வெளியே போ என பிரச்சனை செய்கிறார். இதெல்லாம் ஒரு கல்யாணமா? என கோபத்தில் கத்துகிறார். பாண்டியும் நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்டு காலில் விழுகிறார். ஆனால் சரண்யா கேட்பதாக தெரியவில்லை. சரண்யா பாண்டியை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என உறுதியாக கூறிவிட்டார். மாயனுக்கும் இந்த விஷயத்தில் என்ன செய்வது என்று தெரியவில்லை.

    தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    சரண்யா பாண்டியை ஏற்றுக் கொண்டால் தான் கதை ஒருமுடிவுக்கு வரும். அதற்கு பாண்டி, சரண்யாவுக்கு ஏற்றார் போல் மாற வேண்டும். அப்படி மாறினால் தான் சரண்யா பாண்டியை எற்றுக் கொள்வார். இனிமேல் சரண்யா - பாண்டிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான் சீரியல் கதை பயணிக்கும் என்ற தகவலும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி