நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 1000 எபிசோடுகளை நிறைவு செய்யவுள்ளது. இந்த சந்தோஷமான தகவல் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது
சரவணன் மீனாட்சி ஹிட் சீரியலின் வெற்றிக்கு பிறகு விஜய் டிவியில் மிகப் பெரிய வெற்றி சீரியல் என்றால் அது நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் தான். முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு 2ம் பாகத்திற்கும் கிடைத்தது. இப்போது சீரியல் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. பலரும் இந்த நெடுந்தொடரை விரும்பி பார்க்கின்றனர். தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்ற சீரியல் லிஸ்டில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரும் உள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் தேர்களின் சிற்பங்களில் ஆங்காங்கே விரிசல்..
இந்த சீரியலின் மிகப் பெரிய வெற்றிக்கு காரணம் மாயனாக நடிக்கும் செந்தில் பாலாஜி, மற்றும் சீரியலின் கதைக்களம். சில மாதங்கள் முன்பு முத்துராசை யார் கொலை செய்தார் என்ற ஒற்றை கேள்வியை வைத்து சீரியல் பயங்கர ஹிட் அடித்தது மிகவும் விறுவிறுப்பான காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த சீரியல் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், அதே விறுவிறுப்பான கதைக்களத்தில் இருக்கும் சீரியலில் மாயனை போலவே இன்னொரு கதாபாத்திரம் கதையில் இணைந்தது அதாவது, செந்தில் பாலாஜி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதுவும் சீரியலுக்கு ட்விஸ்டாக இருந்தது.
Gold Loan : கம்மியான வட்டியில் எந்த வங்கியில் நகைக் கடன் கிடைக்கும்? இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
நடுவில் மகாவாக நடித்த ரச்சிதா சீரியலில் இருந்து விலகியது சின்ன சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்போது அவர் ரோலில் அரண்மனை கிளி ஜானு நடித்து வருகிறார். இப்போது அடுத்த திருப்பமாக முத்துராசு மறுபடியும் ஐஸ்வர்யாவை பழி வாங்க வந்துள்ளார். கடந்த வாரத்தில் இருந்து முத்துராசுவின் ரீ எண்ட்ரி சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யாவுக்கு கார்த்திக்கும் கல்யாணமும் முடிந்து விட்டது.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் 1000 எபிசோடுகளை நிறைவு செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதல் பாகம் மற்றும் 2 வது பாகம் சேர்த்து இன்னும் சில நாட்களில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் `1000 எபிசோடுகளை நெருங்கவுள்ளது. சின்னத்திரையில் ஆயிரம் எபிசோடுகள் என்பது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இந்த தருணத்தை சீரியல் குழு கேக் வெட்டி கொண்டாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.