• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இனி சீரியலே வேற மாறி தான்... மாயன் vs மாறன் ஆட்டம் ஆரம்பம்!

இனி சீரியலே வேற மாறி தான்... மாயன் vs மாறன் ஆட்டம் ஆரம்பம்!

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

மாறன், மாயனிடம் 5 டைரிகளை கொடுத்து படிக்க சொல்கிறார்.

  • Share this:
    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஒட்டுமொத்த கதையும் வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கி விட்டது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உண்டு. கடந்த சில மாதங்களாக முத்துராசு கொலை தொடர்பாக அரங்கேறிய காட்சிகள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருந்தது. ஒருவழியாக முத்துராசை கொலை செய்தவர் யார் என தெரிந்து போக, இடையில் கதையின் சுவாரசியம் குறைய தொடங்கியது. இந்த நேரத்தில் தான் மாயனின் குடும்பத்தார் வீட்டைவிட்டு விட்டு வெளியே போக, யாரும் எதிர்பாராத ட்விஸ்டாக மாறன் கதாபாத்திரம் எண்ட்ரி.

    இரட்டை சகோதர்கள் என மாறன் மாயன் இரு தோற்றத்தில் கதை துவங்கியுள்ளது. மாயனுக்கு அப்படியே எதிர்விதமாக படித்த அம்மாவின் பாசமான பையனாக மாறன் கதாபாத்திரம் தோன்றியுள்ளது. அதே நேரம், தங்கைகள் ஐஸ்வர்யா, சரண்யா, காயத்ரி என பெரியம்மா குடும்பத்தை அடியோடு வெறுக்கும் வன்மை மாறன் மனதில் உள்ளது. புதிய உறவை கண்டு செய்வதறியாமல் திகைப்பில் நிற்கும் மாயன், அம்மாவா? தங்கைகளா? என குழம்பி நிற்கிறார். அம்மாவை பார்த்து பேசவும் விரும்பமாட்டுகிறார். தம்பி மாறனிடம் மட்டும் பேசும் மாயன், வீட்டை விட்டு கிளம்புவதாக கூறுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த நேரத்தில் தான் மகா வீட்டுக்கு வர அவரும் மாறனை கண்டு ஷாக் ஆகிறார். இத்தனை வருடங்களாக அம்மாவின் பாசத்திற்கு ஏங்கி நின்ற மாயன், அம்மா வந்ததும் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறார். அதற்கு பல காரணங்களையும் கூறுகிறார். இந்த நேரத்தில் தான் மாறன், மாயனிடம் 5 டைரிகளை கொடுத்து படிக்க சொல்கிறார்.



    இத்தனை வருடங்களாக மாயனை பிரிந்த மொத்த கவலை காரணம் எல்லாவற்றையும் அவரின் அம்மா அதில் எழுதியிருக்கிறார். இதை மகா, மாயனிடம் படித்துக் காட்டுகிறார். தாய் பாசத்தில் மாயனும் கதறி அழுகிறான். இந்த புரமோ, பார்ப்பவர்களையும் ஒரு நிமிடம் கண் கலங்க வைத்து விடுகிறது. இனிமேல் மாயன் மாறன் ஆட்டம் தான் சீரியலில் வரும் நாட்களில் அரங்கேற உள்ளது. இருவரும் இணைந்து மாசாணிக்கு ஒரு முடிவு கட்டுவார்கள் என தெரிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: