• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மணிரத்னம் படத்தின் ஹீரோயின் தான் மாயனின் அம்மா நாச்சியார்!

மணிரத்னம் படத்தின் ஹீரோயின் தான் மாயனின் அம்மா நாச்சியார்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  • Share this:
    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நாச்சியார் ரோலில் நடிக்கும் நடிகை சபிதா ஆனந்த் குறித்து பலருக்கும் தெரியாதவை.

    பெரிய திரையில் ஹீரோயின்களாக கலக்கிய பலரும் இப்போது சின்னத்திரையில் அம்மா, அக்கா, அண்ணியாக கலக்கி வருகிறார்கள். குறிப்பாக புதுமுக சின்னத்திரை நடிகர் - நடிகைகள் நடிக்கும் சீரியலில் மூத்த நடிகைகளுக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடிகை சபிதா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    ’மாட்டொரு சீதா’ என்ற மலையாள படம் தான் இவரின் முதல் அறிமுகம். அப்போது சபிதாவுக்கு 5 வயது. அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 16 வயதில் பல மலையாள படங்களில் தங்கை ரோலாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அப்போது தான்
    மணிரத்னம் இயக்கத்தில் ’உணரு ’என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்து மோகன்லால், மம்மூட்டி படங்களில் நாயகியாக கமிட் ஆனார்.

    மலையாளத்தில் சுமார் 100 திரைப்படங்களுக்கு மேல் நடித்த சபிதாவுக்கு தமிழில் முதல் அறிமுகம் சின்னப்பூவே மெல்ல பேசு படம்தான்.அதன்பிறகு என்னைவிட்டு போகாதே, தலைவாசல், சின்னத்தாயி, ராசம்மா, மாயி, வாழ்க்கை சத்திரம், நினைவெல்லாம் நித்யா, கைதியின் தீர்ப்பு என ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.இதுவரை 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் சபிதா ஆனந்த், தமிழில் தூர்தஷன்தானில் ஒளிப்பரப்பான கடல் புறத்தில் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சன்டிவியின் கோகிலா எங்கே போகிறாள் தொடர் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. காவ்யாஞ்சலி,சொர்க்கம், கோலங்கள், பெண், ராஜ ராஜேஸ்வரி, சிவசக்தி போன்ற பல தொடர்களில் நடித்தார். தெய்வமகள் சீரியலில் சத்யாவின் அத்தையாக சரோஜா என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்தார். இவரின் நடிப்புக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் சவாலாக எடுத்து கொண்டு கலக்கி விடுவார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    sabitha anand இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sabitha.anand)






    சரவணன் மீனாட்சி சீரியலில் மிர்ச்சி சரவணனின் அம்மாவாக நடித்தவர். தொடர்ந்து அவருடன் பல சீரியல்களில் அம்மாவாக, மாமியாராக நடித்தார். சீரியலில் தனக்கென தனி பாதையை அமைத்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் தற்போது நாச்சியார் ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: