விஜய் டிவிக்கும் ரச்சிதாவுக்கும் என்ன தான் பிரச்சனை? சீரியல் குறித்த கேள்விக்கு இப்படியொரு பதிலா!

நாம் இருவர் நமக்கு இருவர் மகா

நமக்கு அடி ஒண்ணும் புதுசு இல்ல. பார்ப்போம் என்ன தான் நடக்கும்னு, போற வரைக்கும் போவோம்

 • Share this:
  சரவணன் மீனாட்சி ஹிட் சீரியலின் சீசன் வெற்றிக்கு பிறகு நடிகை ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மூலம் மீண்டும் விஜய் டிவி-க்கு என்ட்ரி கொடுத்திருந்தார்.

  இந்த சீரியல் தற்போது ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. அதற்கு காரணம் நடிகை ரச்சிதா, செந்தில் பாலாஜி, மற்றும் சீரியலின் கதைக்களம். கடந்த மாதம் முழுவதும் முத்துராசை யார் கொலை செய்தார் என்ற ஒற்றை கேள்வியை வைத்து சீரியல் சென்றது. மேலும், மிகவும் விறுவிறுப்பான காட்சிகளுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த சீரியல் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

  இந்த நிலையில், அதே விறுவிறுப்பான கதைக்களத்தில் இருக்கும் சீரியலில் மாயனை போலவே இன்னொரு கதாபாத்திரம் கதையில் இணைந்தது அதாவது, செந்தில் பாலாஜி மீண்டும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதனிடையே, சீரியலில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரச்சிதா சீரியலில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் ஒரு செய்தி வெளியானது. இவருக்கு கன்னட சினிமாவில் படவாய்ப்புகள் வந்துள்ளதால் இந்த முடிவுக்கு வந்ததாக தகவல் கசிந்தது. கன்னடத்தில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்க இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

  அதற்கேற்றாற் போல, கன்னட ஸ்டார் மற்றும் படக்குழுவுடன் படப்பிடிப்பு தலத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டார். அவை இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், கடந்த சில எபிஷோடுகளில் ரச்சிதாவை காண முடியாததால், அவர் சீரியலில் இருந்து உண்மையில் விலகிவிட்டாரா? என ரசிகர் சந்தேகமடைந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்டு விலகவில்லை என்பதைக் கூறும் வகையில் ஒரு இன்ஸ்டா பதிவு ஒன்றை புகைப்படத்தோடு அவர் வெளியிட்டுள்ளார். அதில், "அதே தூண்… அதே மாடி… அதே கதவு… அதே வீடு… ஆஹா மறுபடியுமா? நான் எங்கேயும் போகல, இங்கேயே தான் இருக்கிறேன். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகிவிட்டதாக சில வதந்திகள் வெளி வந்துள்ளன. ஆனால் நான் விலகவில்லை, போற வரைக்கும் போவோம்… தானா நின்னா பாத்துக்கலாம்.
  அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க. இந்த விஷயத்தை பெருசுபடுத்துறதுல எந்த பலனும் இல்ல. சீரியலை விட்டு போறாங்க, போறாங்கனு சொல்லி நீங்களே போக வச்சிடுவிங்க போல... அதுமட்டுமல்லாமல், நமக்கு அடி ஒண்ணும் புதுசு இல்ல. பார்ப்போம் என்ன தான் நடக்கும்னு, போற வரைக்கும் போவோம், சப்போர்ட் பண்ண நீங்கதான் இருக்கீங்களே, என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்," என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவின் மூலம் சீரியலை விட்டு விலகவில்லை என்பது உறுதியானாலும், அவர் கொடுத்த ட்விஸ்ட் பதிலால் ரசிகர்களிடையே சில குழப்பங்களும் எழுந்துள்ளன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: