நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அடிக்கடி ஃபோன் செய்து மிரட்டி வந்த முத்துராசுக்கு தகுந்த பதிலடி கொடுத்து பிரச்சனைக்கு ஒருவழியாக முடிவு கட்டினார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவுக்கும், கார்த்திக்கிற்கும் திருமணம் நடந்ததை முத்துராசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தினம் தினம் ஐஸ்வர்யாவுக்கு ஃபோன் செய்து டார்ச்சர் செய்து வருகிறார் முத்துராசு. இதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளுடன் நடந்த திருமண வாழ்கையை சந்தோஷமாக வாழ முடியாமல் தவிக்கிறார் ஐஸ்வர்யா. இன்றைய எபிசோடில் கை உடைந்து வீட்டில் இருக்கும் மாறனுக்கு தாமரை அனைத்து பணிவிடைகளையும் செய்கிறார். ஆனாலும் தனது கோபத்தை தாமரை மீது காட்டுகிறார் மாறன். இதனால் தாமரை கண்ணீர் விடுகிறார்.
குக் வித் கோமாளி ஸ்ருதிகாவுக்கு எந்த வயசுல திருமணம் நடந்தது தெரியுமா? அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!
இந்த நேரத்தில் தான் வீட்டில் தனியாக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு முத்துராசு ஃபோன் செய்து, உன் ஞாபகமா இருக்கிறது என தப்பு தப்பாக பேசுகிறார். இதனால் கோபமடையும் ஐஸ்வர்யா, முதன்முறையாக தைரியமாக பேசி முத்துராசை மிரட்டுகிறார். உன்னால் முடிந்ததை செய்து கொள் என்கிறார். அதுமட்டுமில்லை தனது கணவர் கார்த்திக்கை பார்த்து பயந்து நடங்கும் கோழை என்றும் முத்துராசை சொல்லிவிடுகிறார். இந்த கோபத்தில் ஐஸ்வர்யா - கார்த்திக்கை பழி வாங்க வேண்டும் என நினைக்கிறர் முத்துராசு.
இந்த பக்கம் மாயன் குடும்பத்தில் சரண்யா கல்யாண வேலைகள் தொடங் விட்டது. மாப்பிளை, அப்பா -அம்மாவை அழைத்து வரமாட்டேன் என்றதும் மகா, நாச்சியாருக்கு மிகப் பெரிய ஷாக். ஆனால் சரண்யா இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அவர்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிறார். இது நாச்சியாருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.இப்படி இருக்கையில் கார்த்திக், அவரின் அப்பா அம்மா, ஐஸ்வர்யா எல்லோரும் கல்யாண நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு காரில் கிளம்புகின்றனர்.
கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் முக்கிய பிரபலம்!
அப்போது அவர்களின் காரை ஒரு பெரிய கார் வழிமறுக்கிறது. யாரென்று பார்த்தால் முத்துராசு கார்த்திகிடம் பிரச்சனை செய்வதற்காக தனியாக வருகிறார். அவரை பார்த்ததும் ஐஸ்வர்யா ஷாக் ஆகுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.