• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • டான்ஸ் மீது கொண்ட காதலால் டான்சரையே மணந்தார்... வில்லாதி வில்லி காயத்ரி கெரியர் லைஃப்!

டான்ஸ் மீது கொண்ட காதலால் டான்சரையே மணந்தார்... வில்லாதி வில்லி காயத்ரி கெரியர் லைஃப்!

காயத்ரி யுவராஜ்

காயத்ரி யுவராஜ்

கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

  • Share this:
    எந்த கேரக்டெர் கொடுத்தாலும் உயிரை கொடுத்து நடிக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், நெகட்டிவ் ரோலில் பின்னி எடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    அதனால் தான் என்னவோ அவருக்கு பெரும்பாலும் நெகட்டிவ் ரோல் உள்ள சீரியல்கள் அதிகம் தேடி வருகின்றனர். திருமணத்திற்கு பின்பு தான் காயத்ரிக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ஒருபக்கம் குடும்பம் மறுபக்கம் ஆக்டிங் என்று மெனேஜ் செய்கிறார்.

    இப்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக அமைதியான ரோலில் நடிக்கிறார். இந்த சீரியலில் கத்தி - காயத்ரி இந்த ஜோடிக்கு தனி ஃபேன்ஸ் பேட்ஜ் கூட உண்டு. அப்படியே சன் டிவி சித்தி சீரியலில் நெக்டடிவ் ரோல் என மாறி மாறி தனது நடிப்பு திறனை வெளிப்படுத்துகிறார்.

    சீரியலுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்மந்தமே இருக்காது.. ராஜா ராணி புகழ் ’மயிலு’ யார் தெரியுமா?

    சென்னையில் பிறந்து வளர்ந்த காய்த்ரி, டான்ஸ் கற்றுக்கொள்ள விரும்பினார். அதன்படி டான்ஸ் ஸ்டியோ சென்று கொண்டிருந்த அவருக்கும், நடன ஆசிரியரான யுவராஜூக்கு காதல் ஏற்பட, இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது தான் சன் டிவி சீரியல் வாய்ப்பு அவரை தேடி வந்தது. தென்றல் சீரியலில் நடித்தார். அதன் பின்பு விஜய் டிவியில் ரியோ நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்தார். அந்த கேரக்டருக்கு கிடைத்த ரீச்சை தொடர்ந்து பல முன்னணி டிவிகளில் உள்ள சீரியல்களில் காய்த்ரிக்கு வாய்ப்பு கிடைத்தது.

    கணவர் யுவராஜ் மற்றும் மகனுடன் காயத்ரி


    அரண்மனை கிளி சீரியலில் ரேணுகா என்ற ரோலில் வில்லியாக நடித்தார். Mr and Mrs கில்லாடி, ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் யுவராஜ் உடன் ஏற்பட காதல் கதையை காயத்ரி ஒருமுறை பகிர்ந்துன் கொண்டார். இவருக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சின்னத்திரை, காயத்ரியை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதால் நடிப்பை தொடர்கிறார். ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடித்துவிட்டார். காயத்ரியின் கண் தான் அவரின் மொத்த அழகுக்கும் நடிப்புக்கும் மேலும் அழகு சேர்க்கிறது. சமீபத்தில் இவரின் பிரடைல் லுக் ஃபோட்டோ ஷூட் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து லைக்ஸ்களை அள்ளியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: