Home /News /entertainment /

’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் ராசி.. நடிகை காயத்ரி எடுத்திருக்கும் அதிரடி முடிவு!

’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் ராசி.. நடிகை காயத்ரி எடுத்திருக்கும் அதிரடி முடிவு!

நாம் இருவர் நமக்கு இருவர்  காயத்ரி

நாம் இருவர் நமக்கு இருவர் காயத்ரி

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை போலவே இந்த சீரியலும் ஹிட்டடிக்கும் என காயத்ரி நம்பிக்கை

    ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் மூத்த அக்காவாக நடித்து சின்னத்திரையில் கலக்கிய நடிகை காயத்ரி யுவராஜ் தற்போது அக்கா ரோலில் 2 தங்கைகளுக்கு அக்காவாக மீண்டும் நடிக்கிறார். இதுக் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    எந்த கேரக்டர் கொடுத்தாலும் உயிரை கொடுத்து நடிக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், நெகட்டிவ் ரோலில் பின்னி எடுப்பார் . ஆனால் அவர் நடித்த நெகடிவ் ரோலை விடவும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்த காயத்ரி ரோல் பயங்கர ரீச்சை வாங்கி தந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு தான் காயத்ரிக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு ஒருபக்கம் குடும்பம் மறுபக்கம் ஆக்டிங் என்று மேனேஜ் செய்கிறார்.

    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக அமைதியான ரோலில் நடித்தார். இந்த சீரியலில் கத்தி - காயத்ரி  ஜோடிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது. இந்த சீரியல் அண்மையில் முடிவடைந்தது. இப்படி இருக்கையில், மீண்டும் அதே போன்ற மூத்த அக்கா ரோலில், 2 தங்கைகளுக்கு அக்காவாக  காயத்ரி நடிக்கிறார். ஆர்யன் லீட் ரோலில் நடித்து இருக்கும் இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

    பிரபல தெலுங்கு சீரியலான ’ரத்தமா குத்துரு’ சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த தொடர். தெலுங்கில் பயங்கர ஹிட்டடித்த இந்த சீரியல் அம்மா- மகள் சென்டிமெண்ட்டை அடிப்படையாக கொண்டது.இந்த தொடரின் தமிழ் ரீமேக் ஜீ தமிழில் விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ளது. அதுமட்டுமில்லை இந்த தொடரில் பிரபல நடிகை அர்ச்சனாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனாவின் மூத்த மகளாக காயத்ரி நடிக்கிறார். இவருக்கு தங்கையாக பிரணிக்கா நடிக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்த சீரியலுக்கு மீனாட்சி பொண்ணுங்க என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை போலவே இந்த சீரியலும் ஹிட்டடிக்கும் என காயத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அண்மையில் இந்த சீரியலின் அறிமுக புரமோ வெளியாகி இருந்தது. கூடிய விரைவில் சீரியல் டெலிகாஸ்ட் டைம் அறிவிக்கப்படும். காயத்ரியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதே போல் நெகடிவ் ரோலில் நடிக்க வேண்டாம் என்று அன்பு கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி