• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கொரோனாவால் விஜய் டிவியில் பறிப்போன வாய்ப்பு.. ஜீ தமிழில் என்ட்ரி கொடுக்கும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ தேவி!

கொரோனாவால் விஜய் டிவியில் பறிப்போன வாய்ப்பு.. ஜீ தமிழில் என்ட்ரி கொடுக்கும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ தேவி!

நாம் இருவர் நமக்கு இருவர் தேவி

நாம் இருவர் நமக்கு இருவர் தேவி

தேவியாக ரக்சா நடித்துக் கொண்டிருந்தார். ஏன் மாற்றப்பட்டார் என்ற தகவல் ரசிகர்களுக்கு தெரியாமலேயே இருந்தது.

  • Share this:
    நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகத்தில் நடித்த ரக்ஷா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே சிவம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார்.

    விஜய் டிவியில் 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சக்கை போடு போட்ட சீரியல் என்றால் அது விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 தான். ஆனால், துர்திஷ்டவசமாக, இந்த சீரியல் டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருந்தபோது கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் மூலைமுடுக்கெல்லாம் பரவத் தொடங்கியது. அப்போது விதிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சீரியலின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

    பின்னர், சூழல் இயல்பு நிலைக்கு திரும்பி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டதும், இதில் இரண்டு ஹீரோயின்களாக நடித்த ரக்சா, ரேஷ்மி என இருவருமே மாற்றப்பட்டிருந்தனர். ஹீரோ மாயன் கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த செந்தில் மட்டும் தொடர்ந்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த வியப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், மாயன் - தேவி ஜோடிக்கு அமோக வரவேற்பு இருந்தது. தேவியாக ரக்சா நடித்துக் கொண்டிருந்தார். ஏன் மாற்றப்பட்டார் என்ற தகவல் ரசிகர்களுக்கு தெரியாமலேயே இருந்தது.

    இது குறித்து  ரக்ஷா விளக்கம் அளிக்கும்போது, " லாக்டவுன் அறிவிச்சதும் பெங்களூருக்கு சென்றுவிட்டேன். ரெண்டரை மாசம் கழிச்சு ஷூட்டிங்னு சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்ப பெங்களூரு, சென்னை ரெண்டு இடத்துலயுமே பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமா இருந்ததால எங்க வீட்டுல ஷூட்டிங்ல கலந்துக்க வேண்டாம் என சொல்லிட்டாங்க. ஸ்டேட் விட்டு ஸ்டேட் வர்றதுல இ-பாஸ் மாதிரியான் நடைமுறைகள் வேற இருந்ததால, `என்னால கலந்துக்க முடியாது’ன்னு சொன்னேன். திரும்ப முழு லாக்டவுன் முடிஞ்சு மறுபடியும் ஷூட்டிங் தொடங்கினப்ப எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை" என்று கூறி இருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ரக்சா நடித்துக் கொண்டிருந்த தேவி கதாப்பாத்திரத்தில் சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்த ரக்சிதா நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் பாகம் விரைவாக முடிக்கப்பட்ட நிலையில், நாம் இருவர் நமக்கு இருவர் 2, பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இருந்து விலகினாலும் ரேஷ்மி விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு தொடரான ‘ராஜ பார்வை’ தொடரில் நடித்து வருகிறார். ரக்ஷா பற்றிய தகவல் மட்டும் எதுவும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அவர் குறித்த அப்டேட் இப்போது கிடைத்திருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே சிவம் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ரக்ஷா நடிக்க இருக்கிறார். ஆனால், அவரது கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: